மறுபடியும் டாட் காம் கம்பெனிகள் பெரிதாக உலா வர ஆரம்பித்திருக்கின்றன. இந்த மாதிரி சிறியதாக வருபவை ஆரம்பிக்கும் போதே யாராவது தங்களை வாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஆரம்பிப்பார்கள்.

Flickr என்னும் படங்களை பகிர்ந்து கொள்ளும் தளம் Yahoo வால் வாங்கப்பட்டிருக்கிறது. இதில் விளம்பரங்கள் மூலம் மட்டும் வரும் வருமானம் பத்துமா என்று தெரியவில்லை.

இத்தோடு HP தானும் படம் போடுகின்றேன் என்று Snapfish என்னும் படம் பகிர்ந்து கொள்ளும் தளத்தை வாங்கப்போகிறது..

Livejournal தளம் blogger போன்றது. இதை SixApart நிறுவனம் வாங்கியுள்ளது. SixApart நிறுவனம் பரவலாக உபயோகிக்கப்படும் Movabale Type என்னும் வலைப்பதிவுக்கான மென்பொருள் வெளியிடுகிறது. நான் பார்த்த சில Livejournal பதிவுகளிளிருந்து இது ப்ளாகரை விட நன்றாக இருக்கும் போல தெரிகிறது. குறைந்தது நான் பார்த்த பதியப்பட்ட பக்கங்கள் பார்க்க நன்றாக இருந்தன. ஆனால் நான் உபயோகித்ததில்லை.

இந்த வலைப்பதிவு ஃபேஷன் இன்னும் எத்தனை நாளைக்கு தெரியவில்லை. எல்லாரும் சொல்கிறார்களே என்று ஆரம்பித்துப் பார்த்து அப்புறம் பின்னூட்டம் வராவிட்டால் சீ இந்த பழம் புளிக்கும் என்று பெரும்பாலானவர்கள் உருப்படியான காரியம் பார்க்கப் போய் விடுவார்கள். அப்புறம் ஒருவருக்கொருவர் பின்னூட்ட்டம் இட்டுக்கொண்டு ஒருசில வலைப்பதிவர் மட்டும் இருக்கப் போகின்றனர்.

Ask Jeeves என்னும் கம்பெனியை InterActiveCorp கிட்டத்தட்ட இரண்டு பில்லியன் டாலருக்கு வாங்க இருக்கிறார்கள். InterActiveCorp ஆரம்பித்ததே இந்த மாதிரி கம்பெனிகளை வாங்கியதன் மூலம். அதனிடம் இப்பொழுது பெரும்பாலும் hotels.com, expedia.com, ticketmaster.com போன்ற பயண தொடர்பான தளங்கள் உள்ளன. Ask Jeeves ஒரு தேடு தளம். அதிலிருந்த அந்த பயண தளங்களுக்கு மக்களை இட்டுச்செல்வது அவர்களுடைய எண்ணம்.

கொஞ்ச நாள் முன்னால் Microsoft, Groove என்னும் பல பேர் சேர்ந்து வேலை செய்வதை எளிதாக்கும் மென்பொருளை உருவாக்கும் நிறுவனத்தை வாங்கியது. ஆனால் இது அவ்வளவு பெரிய ஆச்சரியமில்லை. Microsoft 2001இல் இதில் முதலீடு செய்திருந்தது. எப்போது வாங்கப் போகிறார்கள் என்று மட்டும் தான் இதுவரை தெரியாமலிருந்தது.

ஆனால் எல்லாம் சேர்ந்து இன்னொரு பங்கு வர்த்தக சரிவைக் கொண்டு வந்தால் அமெரிக்கா தாங்காது.





14
Mar
'05

From the first time they introduced Pocket PC and all other kinds of Palms, I never found any use for them. They are not big enough to do any real computing. The best thing they are useful are as organizer. But organizers are available for $40. Why would one buy an expensive organizer at >$300. So I had an organizer which costed about $40 and served all the purposes I needed like storing phone numbers, a calendar and some task list. It looked almost like a palm. And now after I got the cellphone I have all those basic functionalities in the cellphone. So even the organizer is unused. All those palm tops sales should be going down unless they come up with some scheme to integrate a cellphone and other features into them. Still cellphones are much cheaper.

I am waiting for one device which is a cellphone, a GPS, a decent camera, a good organizer and a music player at a reasonable price. We are getting close to that.





13
Mar
'05

I have not bought too many stuff which had rebates. Given the conditions on how to mail, what to mail and when to mail I am very sceptical about getting back anything. But about 5 months back I had to buy some things which I really needed and they had rebates and also had a better price. After a new digital camera I needed a bigger compact flash memory. I bought a Sandisk card from Amazon which had some rebate. I also got a cellphone for the first time and there was rebate for the phone I bought. Then I was running out of disk space in my hard disk and I was looking at several hard drive options. At that time CompUsa was selling external hard drive with a price of $50 after all rebates. Since that sounded an extermely good deal I bought that also. And then before forgetting I sent all the barcodes and the receipts.

After some time there was an email from Sandisk giving a website address to check the status of rebate. That looked very promising. But I could never get the status from the website because it asked for address or something which I could never enter in the correct way it expected. Anyways the Sandisk rebate came back first, I think in about 2 months. And then just when I was loosing hope the rebate for phone came in about 3 months.

Until now there is no sign of CompUsa rebate. Today I came across this news item. It says FTC (Federal Trading Commission) has filed complaint against CompUsa for failing to pay rebates as promised in their advertisements. Now CompUsa has agreed to pay all their past-due rebates. I will continue waiting.

Speaking of rebates the other day at Walgreen’s store I saw a mail-in rebate of $1 on a ~2$ wind shield washer fluid. You have to spend 37c to mail it.





எந்த பங்கு வர்த்தக முதலீடு பற்றிய புத்தகங்களைப் படித்தாலும் ஒரு விஷயத்தை அவர்கள் பலமுறை வலியுறுத்திச் சொல்லியிருப்பார்கள். உங்களுடைய முட்டைகளை எல்லாம் ஒரே கூடையில் போட்டு வைக்காதீர்கள். கூடை கீழே விழுந்தால் எல்லா முட்டையும் உடைந்து விடும். அதனால் பல கூடைகளில் பரப்பி வைத்திருங்கள். இங்கே கூடை என்பது ஒரு நிறுவனத்தின் பங்கு அல்ல. ஒரு முழு தொழில் வகையைக் குறிக்கும். என்னுடைய பங்குகள் எல்லாம் நினைவுச்சில் என்னும் ஒரே கூடையில் இருந்தன. அந்த தொழிலில் நலிவு ஏற்பட்டதும் என்னுடைய மொத்த முதலீடும் பாதித்தது. வேறு ஏதாவது தொழிலிலும் கொஞ்சம் பிரித்து வைத்திருந்தால் ஓரளவு சமனாகியிருக்கலாம்.

நிறைய புத்தகங்களில் சொல்வது பங்கு வர்த்தங்களில் முதலீடு செய்வதற்கு கணிசமான அளவு முதல் இருக்க வேண்டும். அப்பொழுது தான் உங்கள் முதலை பல கூடைகளில் பிரித்து போட்டு வைக்க முடியும். அப்படி இல்லையென்றால் மியூட்சுவல் ஃபண்ட் அல்லது பத்திரங்கள் என்று வேறு ஏதாவது வகையில் முதலீடு செய்யலாம். முதல் சேரும் வரை பங்கு வர்த்தக செயற்கை மென்பொருள்களைக் கொண்டு விளையாடிப் பார்க்கலாம். உதாரணத்திற்கு Stocksquest. இதில் கணக்கு ஆரம்பித்ததும் உங்களுக்கு கொஞ்சம் பொய்யான பணம் கொடுப்பார்கள். அதை வைத்துக் கொண்டு பங்குகள் வாங்கலாம், விற்கலாம். நிஜ பங்கு மார்க்கெட்டில் என்ன விலையோ அதே விலை தான் இங்கும் இருக்கும். சிலர் போட்டிகள் கூட நடத்துவார்கள் இந்த போலி மார்க்கெட்டில்.

பங்கு மார்க்கெட்டில் பணம் போடுகின்றீர்கள் என்றால் அதற்கு கொஞ்சம் நேரம் செலவு செய்து நீங்கள் வாங்கும் நிறுவனங்களைப் பற்றி ஆராய வேண்டும். எதுவும் செய்யாமல் வாங்கினால் அதற்கும் லாட்டரி டிக்கெட்டிற்கும் வித்தியாசம் இல்லை.





சான்டிஸ்க் காலாண்டு விவரங்களை தெரிவித்த பிறகு தான் விலை குறைய ஆரம்பித்தது. எப்போதும் இந்த காலாண்டு வருமான விவரங்களோடு வருங்காலம் எப்படி இருக்கும் என்றும் நிறுவனங்கள் கொஞ்சம் கோடி காட்டுவார்கள். இதில் சான்டிஸ்க் விலை குறைப்பு நிறைய இருக்கும் என்று சொல்லி விட்டார்கள். இந்த விலை குறைப்பால் வருவாய் எப்படியும் குறையும். அதனால் பங்கு விலை குறைந்து விட்டது. சான்டிஸ்க் விலை குறைத்தால் லெக்சார் சும்மா இருக்க முடியுமா? அதனால் அதனுடைய பங்கும் விலை குறைந்தது. 70 டாலர் இருந்த சான்டிஸ்க் பங்குகளை இரண்டாக பிரித்தார்கள். பங்கு விலை அதிகமாக இருந்தால் இப்படி பிரிப்பார்கள். இப்படி பிரிப்பதால் எல்லோரும் வாங்குவதற்கு ஏற்ற மாதிரி ஒரு பங்கின் விலை குறைவாக இருக்கும். இப்போது கூட ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகளை இது போல இரண்டாக பிரித்தார்கள். சான்டிஸ்க்கின் பங்குகள் பிரித்த பிறகு 35 டாலரில் இருந்து 25 டாலருக்கு குறைந்தது. லெக்சார் நிறுவன பங்குகள் 8 டாலருக்கு குறைந்தது.

இது போதாதென்று அடுத்த காலாண்டுகளில் லெக்சார் நிறுவனம் இந்த விலை குறைப்பில் போட்டி போட முடியாமல் நஷ்டத்தை அறிவித்தது. இதற்கு காரணம் சான்டிஸ்க்கிற்கு நினைவுச்சில்லுகளை தயாரித்து அளிப்பவர்கள் லெக்சாருக்கு சப்ளை செய்பவர்களை விட விலையை உடனடியாக சகாயமாக அளித்தது. இதனால் மார்க்கெட் விகிதத்தை இழக்காமல் இருக்க லெக்சார் தன்னுடைய சில்லுகளை நஷ்டத்தில் விற்க வேண்டி வந்தது. சான்டிஸ்க்கிற்கு வாங்கிய விலை குறைவாக இருந்ததால் இன்னும் லாபத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக லெக்சாரின் பங்குகள் 4 டாலருக்கு சரிந்து இப்போது அங்கே தான் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. நஷ்டத்திலும் ஓரளவு விலை இருப்பதற்கு காரணம் கோடாக் அல்லது யாராவது லெக்சாரை வாங்கலாம் என்ற வதந்தி தான். இத்துடன் இதில் பங்குகளில் பணம் இழந்த ஒரு சிலர் லெக்சார் மேல் வழக்கு தொடர்ந்திருக்கின்றனர். லெக்சார் இந்த மாதிரி விலை குறைப்பு வரப்போகிறது என்று தெரிந்தும் முதலிலேயே அதை வெளியே சொல்லவில்லை என்பது அவர்கள் வாதம்.

இதையெல்லாம் ஆரம்பித்து வைத்த சான்டிஸ்கிற்கு குறுகிய காலத்தில் கொஞ்சம் நஷ்டம் என்றாலும் வருங்காலத்தில் அவர்களுக்கு தங்களுடைய மார்க்கெட் எதிரிகளை ஒழிக்க வேண்டும். அதைத்தான் அது லெக்சாருக்கு எதிராக செய்து வருகிறது. சான்டிஸ்க் ஜப்பானில் தானே ஒரு சில் தயாரிக்கும் தொழிற்சாலையும் நிறுவியுள்ளது. இதனால் அதற்கு இன்னும் விலை குறைப்பு செய்து மேலும் விற்பனையை பெருக்கி நினைவுச்சில் மார்க்கெட்டில் தனிக்காட்டு ராஜாவாக முடியும். இதனால் இப்போது சான்டிஸ்க் பங்குகள் நல்ல விலைக்கு வர சாத்தியங்கள் அதிகம்.

இவையெல்லாம் எனக்கு முன்பே தெரிந்திருந்தால் இவற்றை வாங்கியிருப்பேனே? அதனால் தான் பங்கு மார்க்கெட்டில் ரிஸ்க் அதிகம். எவ்வளவு தான் கவனத்துடன் இருந்தாலும் இது மாதிரி நிகழ்ச்சிகளை கணிக்க இயலாது.

இப்படி நிறைய நஷ்டம் அடைவதை தவிர்க்க என்ன செய்திருக்க வேண்டும்?





பங்குகளை மார்க்கெட்டில் விற்கும் எந்த நிறுவனமும் தன்னைப் பற்றிய எல்லா செய்திகளையும் வெளிப்படையாக சொல்லியாக வேண்டும். இந்த ‘எல்லாம்’ என்பது கொஞ்சம் மேலோட்டமாக எடுத்துக் கொள்ள வேண்டும். தங்களுடைய வியாபார பொருள் ரகசியம் ஏதாவது இருந்தால் அதையெல்லாம் வெளியில் சொல்ல மாட்டார்கள். அப்புறம் போட்டி நிறுவனம் அதை சாதகமாக உபயோகித்துக் கொள்ளும். ஆனால் காலாந்திர வரவு செலவுகளையும், சில முக்கிய செய்திகளையும் SEC (U.S. Securities and Exchange Commission) யிடம் தெரிவிக்க வேண்டும். இத்துடன் இந்த நிறுவனம் பற்றி பத்திரிக்கைகளில் வந்த பொது செய்திகளையும் அந்த நிறுவனத்தின் வலைத்தளத்திலேயே போட்டு வைத்திருப்பார்கள். இவை பொதுவாக Investor Relations என்ற தலைப்பிற்கு கீழே இருக்கும். சான்டிஸ்க் மற்றும் லெக்சார் இரண்டு நிறுவனங்களுடைய இந்த பக்கங்களுக்குச் சென்று பல ஆவணங்களைப் படித்தேன். உதாரணத்திற்கு பங்குகளை விற்க எப்படியெல்லாம் அவர்கள் பணம் பண்ணுகிறோம் என்று சொல்வதோடு எப்படியெல்லாம் அவர்கள் நஷ்டம் அடைய வாய்ப்பிருக்கிறது என்றும் அவர்கள் ஆவணங்களில் போட்டு வைத்திருப்பார்கள்.

சான்டிஸ்க் நிறுவனம் வருடத்திற்கு பில்லியன் டாலர் வருமானம் உடையது. இதோடு ஒப்பிடும் போது லெக்சார் கொஞ்சம் சிறியது. ஆனால் இரண்டு பேரும் பல காப்புரிமைகள் வைத்திருந்தனர். இதிலிருந்தும் வருமானம் உண்டு. காப்புரிமைகளைப் பற்றி தனியாக நிறைய எழுதலாம். இந்த பதிவிற்கு, காப்புரிமைகள் மூலம் வரும் வருமானம் முழுக்க முழுக்க லாபம் என்று தெரிந்தால் போதும். இந்த காப்புரிமை வரவு நினைவுச் சில்லுகளின் விற்பனையோடு ஒப்பிடும் போது சொற்பம் தான். இருந்தாலும் இது ஒரு பாதுகாப்பு. என்னுடைய மூளைக்கு எட்டிய வரையில் எல்லாம் சரியாகவே பட்டது.

போன வருடம் ஜனவரி மாத வாக்கில் சான்டிஸ்க் 70 டாலருக்கு விற்றுக் கொண்டிருந்தது. லெக்சார் 17 டாலருக்கு விற்றுக் கொண்டிருந்தது. அப்போது தான் நான் இவற்றை வாங்கினேன். எப்போதும் காலாந்திர விற்பனை விபரம் அந்த காலாண்டு முடிந்து ஒரு மாதம் கழித்து வெளியிடுவார்கள். நாலாவது காலாண்டு தான் எப்போதும் அமோக விற்பனை நடக்கும். அப்போது நன்றியரைதல் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையென்று எல்லோரும் நிறைய வாங்கிக் குவிப்பார்கள். அதனால் நிறைய வருமானம் வந்திருக்கும் என்று எதிர்பார்ப்பில் பிப்ரவரி மாதத்தில் வருமான விபரங்கள் வெளி வரும் முன்னர் பங்கு விலை கொஞ்சம் மேலே ஏறியது. நானும் சந்தோசமாக உட்கார்ந்திருந்தேன். அப்புறம் காலாண்டு வருமான விபரமும் வெளி வந்தது. எதிர்பார்த்த மாதிரி நல்ல வருமானம். (இந்த எதிர்பார்த்த வருமானம் என்பதை பங்கு வர்த்தகத்தில் ஜாக்கிரதையாக உபயோகிக்க வேண்டும். இங்கே நமக்கு அவ்வளவு தொடர்பில்லை. எனவே அதை பின்னால் பார்க்கலாம்.)

ஆனால் பங்கு விலை? மள மள வென்று குறைந்தது. எனக்கும் ஒன்றும் புரியவில்லை முதலில்.





கொஞ்ச காலம் முன்பு நானும் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்கிறேன் என்று கொஞ்சம் பங்குகளை வாங்கினேன். ஏதோ கொஞ்சம் தெரிந்த விசயங்களை வைத்து செய்த காரியம் அது. இப்போதும் கை சூடாக இருக்கிறது. (கையை சுட்டுக் கொண்டேன்.) இன்னும் நான் வாங்கியது நான் வாங்கிய விலைக்கு மேலே வரவில்லை. எவ்வளவு என்றெல்லாம் கேட்காதீர்கள். ஆனால் அதற்கப்புறம் நிறைய கற்றுக்கொண்டேன். அதனால் இப்போது வர்த்தகம் பற்றிய செய்திகளையும் கவனிக்கிறேன். அப்படி கற்றுக்கொண்டவையும் சில செய்திகளும் இங்கே.

முதலில் பங்கு வர்த்தகம் என்றால் என்ன? விலாவாரியாக எல்லாவற்றையும் விளக்கப் போவதில்லை. அதை ஏற்கனவே தமிழ்சசி எழுதி வருகிறார். என்னைப் பொறுத்த வரை எந்த நிறுவனம் எதிர்காலத்தில் நன்றாக லாபம் சம்பாதிக்குமோ அந்த நிறுவனத்தில் பங்குகளை வாங்க வேண்டும் அவ்வளவு தான். அதை எப்படி கண்டு பிடிப்பது என்பது உங்கள் சாமர்த்தியம்.

சரி நான் என்ன செய்தேன் என்று பார்ப்போம். நான் ஒரு டிஜிட்டல் கேமரா வைத்திருந்தேன். அது வாங்கி இரண்டு வருடம் ஆகியிருந்தது. இதில் இருக்கும் தெளிவு மற்றும் படமெடுக்கும் விதங்களும் பத்த வில்லை எனக்கு. புதிய கேமராக்களின் சிறிய வடிவமும் அதற்கு தூபம் போட்டது. விரைவிலேயே புதிதாக ஒரு கேமரா வாங்கினேன். கேமராவுடம் கூடவே கொஞ்சம் மெமரியும் கொடுத்தார்கள். இந்த கேமராவில் இருந்த எக்கச்சக்கமான படம் எடுக்கும் புள்ளிகளால் அது பற்ற வில்லை. உடனே அங்கங்கே இணையத்தில் தேடி தேவைக்கு அதிகமாக மெமரியும் வாங்கினேன்.

இதே நேரத்தில் தான் பங்கு வர்த்தகத்தில் கொஞ்சம் பணம் போடலாம் என்று அந்தப் பக்கமும் கொஞ்சம் ஆராய்ந்து கொண்டிருந்தேன். என்ன நிறுவனத்தில் வாங்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது இந்த கேமரா மெமரி வாங்கும் படலம் வந்தது. ஆஹா இப்படி புதிது புதிதாக டிஜிட்டல் கேமராக்கள் வந்து கொண்டிருந்தால் எப்படியும் எல்லாருக்கும் நிறைய மெமரி தேவைப்படும். எனவே இந்த தொழிலில் இருக்கும் நிறுவனங்களுக்கு நல்ல லாபம் இருக்கும் எதிர் காலத்தில். ரொம்ப எளிமையான் லாஜிக் இல்லையா? எனவே இந்த மெமரி தயாரிக்கும் நிறுவனங்களைப் பற்றி ஆராய்ந்தேன்.

அப்பொழுது லெக்சார்(Lexar) மற்றும் சான்டிஸ்க் (Sandisk) என்னும் இரண்டு நிறுவனங்களின் மெமரி தான் எல்லா இடங்களிலும் நிறைய விற்றுக் கொண்டிருந்தன. நீங்கள் ஏதாவது வாங்கியிருந்தால் அல்லது அடுத்த தடவை Best Buy, Circuit City செல்லும் போது என்ன நிறுவனம் என்று பாருங்கள். இந்த இரண்டு நிறுவனங்களில் ஒன்றாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.