எங்கள் ஊரில் சின்ன வயதில் கோடை விடுமுறையில் பல்லாங்குழி என்று ஒரு ஆட்டம் ஆடுவோம். இரண்டு பேர் விளையாடக்கூடிய ஆட்டம். ஒரு பலகையில் மொத்தம் பன்னிரெண்டு பள்ளங்கள் இருக்கும். இரண்டு பேருக்கும் ஆரம்பத்தில் நிறைய முத்துக்கள் இருக்கும். நாங்கள் புளியமுத்தை வைத்து விளையாடுவோம். ஒரு பள்ளத்தில் இருந்து முத்துக்களை எடுத்து வரிசையாக அடுத்துள்ள பள்ளங்களில் ஒவ்வொன்றிலும் ஒன்று வைத்து செல்ல வேண்டும். கடைசியாக முடியும் பள்ளத்திற்கு அடுத்த பள்ளம் காலியாக இருந்தால் அதற்கடுத்த பள்ளத்தில் இருக்கும் முத்தெல்லாம் அந்த ஆட்டக்காரருக்கு. இந்த விதிகள் கொஞ்சம் மாறுபடலாம்.
இன்றைக்கு வால்கிரீன்ஸ் கடையில் சும்மா மேய்ந்து கொண்டிருந்த போது இந்த ஆட்டம் மாதிரி பலகை ஒரு பெட்டியின் அட்டைப்படத்தில் வெளியே தெரிந்தது. என்ன என்று எடுத்துப் பார்த்தால் நம் பல்லாங்குழி தான். இங்கே மன்கலா என்று சொல்லுகிறார்கள்.
இந்த விளையாட்டு உலகிலேயே மிகவும் பழமையான விளையாட்டாம். பல நாடுகளிலும் விளையாடப்பட்டிருப்பதாக சொல்வது ஆச்சரியத்தை அளிக்கிறது. ஏன் என்றால் நான் என்னுடைய கிராமத்தைத் தவிர வேறெங்கும் இந்தியாவில் இருக்கும் போது இந்த விளையாட்டைப் பார்த்ததில்லை.
சிறு வயதில் விளையாடும் போது கொஞ்சமும் யோசித்ததில்லை. ஆனால் சில வகை ஆட்டங்கள் செஸ் அளவிற்கு கடினமானதாம். அடுத்த தடவை விளையாடும் போது கவனிக்க வேண்டும்.
http://members.chello.at/theodor.lauppert/games/mancala.htm
http://www.cs.uu.nl/~hansb/d.gam/mancala.html
http://members.aol.com/hyadessoft/mancala/museum/index.html மியூசியம்
நான் வாரத்திற்கு ஒரு முறை தான் வலை பதிகிறேன். பெரும்பாலும் எழுவதற்கு சோம்பேறித்தனம் தான். பல விஷயங்களைப் பற்றி படிக்கும் போது அதையெல்லாம் பதியலாமே என்று தோன்றும். ஆனால் படித்து முடித்ததும் எழுதுவதற்கு எங்கிருந்தோ ஒரு சோம்பேறித்தனம் வந்து தொற்றிக் கொள்ளும். அதை எழுதி என்ன ஆகப் போகிறது என்று ஒரு காரணம் சொல்லிக்கொண்டு வேறு ஏதாவது உருப்படியில்லாத வேலை செய்யப் போய் விடுவேன்.
ஆனால் ஒருவர் தன்னுடைய வேலையை விட்டு விட்டு முழு நேரம் வலை பதியப்போகிறேன் என்று ஆரம்பித்திருக்கிறார். http://www.kottke.org என்ற தளத்தில் பதியும் இவர் வலை உலகில் கொஞ்சம் பிரபலமானவர் தான். தான் முழு நேரம் பதிவதற்கு வருமானத்திற்காக அதை வாசிப்பவர்களிடம் இருந்து நன்கொடை கேட்கிறார். இதுவரை சம்பாதித்த தொகையில் பாதி வந்தால் போதும் என்று தன்னுடைய வாழ்க்கையையே கொஞ்சம் மாற்றிக் கொண்டுள்ளார். கொஞ்சம் பைத்தியக்காரத்தனமாகத்தான் தெரிகிறது. நல்ல படியாக நடக்க வாழ்த்துவோம்.
டெர்ரி பிராட்செட் ஆங்கில எழுத்தாளர். அருமையாக நகைச்சுவை நாவல்கள் எழுதுகிறார். வரிக்கு வரி இருக்கும் நக்கல் சிரிப்பு மூட்டினாலும் அங்கங்கே கொஞ்சம் சிந்திக்கவும் வைக்கிறார். இது வரை Color of magic, Equal Rites மற்றும் Eric படித்திருக்கிறேன். நூலத்தில் இருந்து மேலும் ஒன்று எடுத்து வந்திருக்கிறேன். இவருடைய கதைகள் எல்லாம் ஃபாண்டசி வகையரா. ஆனால் ஆங்காங்கே நிஜ உலக நடப்புகளைப் பிடித்து வாருகிறார். சில இடங்களில் Lord of the Rings போன்ற கதைகளையும் விட்டு வைக்கவில்லை. பெரும்பாலான புத்தகங்கள் 200 அல்லது 300 பக்கங்கள் தான். நேரம் இருந்தால் படித்துப் பாருங்கள்.
சின்ன வயதில் பார்த்த படங்களில் ஞாபகம் இருக்கிறது ஒன்றே ஒன்று தான். அது சபாபதி. எப்போது என்று ஞாபகம் இல்லை. ஆனால் ராமச்சந்திரனின் நகைச்சுவையை ரசித்து சிரித்த ஞாபகம் இருக்கிறது. மற்றபடி பல கருப்பு வெள்ளை சிவாஜி, எம்ஜிஆர் முகங்கள் ஞாபகம் இருந்தாலும் படங்கள் எதுவும் நினைவில் நிற்கவில்லை. நிறைய பழைய படங்களுக்கு போகாமல் இப்போது நினைவில் நிற்பவை.
பூவே பூச்சூடவா ஒரு தடவை பார்க்கலாம்.
மைக்கேல் மதன காம ராஜன் பல தடவை பார்த்தாயிற்று.
குருதி புனல் ஒரு தடவை பார்க்கலாம்.
அபூர்வ சகோதரர்கள் பல தடவை பார்த்தாயிற்று.
பாட்சா 1, 2 தடவை.
இதயத்தை திருடாதே ஒரு தடவை.
மௌனகீதம் ஒரு தடவை.
ஆட்டோகிராப் நீண்ட நாளுக்கு அப்புறம் இங்கே பார்த்த தமிழ் படம். ஒரு தடவை பார்க்கலாம். முழுதாக எதுவும் இல்லை. கதை அது பாட்டுக்கு போகிறது அது பாட்டுக்கு முடிகிறது. நிறைய பேருக்கு பிடித்திருக்கிறது.
Forest Gump பல தடவை பார்த்தாயிற்று. இனியும் பார்க்கலாம்.
Jurassic Park 2, 3 தடவை.
Evil Dead முதல் தடவை பார்த்திருக்க கூடாது.
Titanic ஒரு தடவை. ரொம்ப நீளம்.
Tremors ஒரு தடவை. நம்ப முடியவில்லை ஆனால் பார்க்கலாம்.
Dr. Strangelove 1, 2 தடவை. நல்ல நகைச்சுவை.
The Others கொஞ்சூண்டு ரசித்த ஒரே திரில்லர்.
Bend it like Beckham ஒரு தடவை பார்க்கலாம்.
Monsoon Wedding ஒரு தடவை. ரொம்ப கெட்ட வார்த்தைகள்.
Shrek I,II. 1, 2 தடவை ரசிக்கலாம்.
Monsters Inc Shrek விட இது எனக்கு பிடித்திருந்தது.
Shark’s Tale ஒரு தடவை. பரவாயில்லை.
Finding Nemo 1, 2 தடவை. நல்ல கிராபிக்ஸ்.
Million dollar baby ஒரு தடவை. அபாரமான நடிப்பு. அவளின் குடும்பத்தைக் காட்டும் காட்சிகள் தவிர மற்ற இடங்களில் ஒரு படம் பார்க்கிற உணர்வே இல்லை. நேரில் பார்க்கிற மாதிரி இருந்தது. இருந்தாலும் ரொம்ப அழ வைத்து விட்டார்கள்.
Napolean dynamite இது ஞாபகத்தில் இருக்கும் ஒரே காரணம் தியேட்டரில் இல்லாத ஜோக்குக்கெல்லாம் சிரித்தார்கள். நாங்கள் யாரும் சிரிக்காத ஜோக்கிற்கு சிரித்தோம்.
Lord of the Rings I,II,III ஒரு தடவை. ஆனால் புத்தகம் படித்துவிட்டு பார்க்க வேண்டும். இன்னும் தியேட்டரில் பார்க்கவில்லை. தியேட்டரில் வரும் போது புத்தகம் முடிக்கவில்லையாதலால் போகவில்லை.
The Luzhin defense இதில் சதுரங்கம் பிரதானமாக இருப்பதால்.
Dogma ஒரு தடவை. நக்கலுக்காக. இறுதியில் வன்முறை அதிகம்.
Good, bad, ugly புதையல் கதை. கடைசி வரை பார்க்க வைத்தது.
Terminator 2 கிராபிக்ஸ்
Memento வித்தியாசம்
Closer ஒரு தடவை. இதுவும் அநியாயத்திற்கு கெட்ட வார்த்தைகள். இருந்தாலும் படம் உட்கார்ந்து பார்க்க வைத்தது.
இப்போதைக்கு இவ்வளவு தான் ஞாபகத்திற்கு வந்தது.