போன வாரம் குளிர் வாட்டியெடுத்து விட்டது. வார இறுதியில் இரண்டு அடிக்கு பனி. கார் அங்கங்கே தன் இஷ்டத்திற்கு போனது. ரோட்டில் ரெண்டு பக்கம் மலை மாதிரி பனி குவித்து வைத்திருந்தார்கள். பனி பெய்யும் முன்னால் நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தேன். அடுத்த நாள் திரும்பி வரும் போது மூன்று லேன் ரோட்டில் நட்ட நடுவில் இரண்டு டயர் தடங்கள் தவிர வேறெங்கும் ஓட்ட முடியவில்லை. வெளியே செல்ல வேண்டுமானால் காரை பனியிலிருந்து சுத்தம் செய்து காருக்குள் உட்கார்ந்து கார் சூடாவதற்குள் கை குளிரில் வலிக்க ஆரம்பித்து விடும். காரில் சீக்கிரம் ரிமோட் ஸ்டார்ட் வைக்க வேண்டும். வீட்டுக்குள்ளே ஹீட்டரில் எண்பது வைத்தாலும் குளிர் காற்று தான் வந்தது. எல்லாவற்றிற்கும் குளிரை சபித்து விட்டு பேப்பரில் பக்கத்து ஊரில் இருக்கும் இந்த 87 வயது மூதாட்டியைப் பற்றி படித்தால் புலம்புவதற்கு வெட்கமாகத்தான் இருக்கிறது.






ம் என்ன சிலை இது?


ஐயோ சிலை ஆடுகிறது.


காப்பாத்துங்க.





6
Jan
'05


பாஸ்டன் நகருக்குள் அவ்வப்போது சிலர் மேக்கப் அணிந்து பக்கத்தில் உண்டியல் பாத்திரத்துடன் இப்படி சிலை மாதிரி நிற்பர். அதைப் பார்த்து ரசிப்பவர்கள் பணம் போட்டு விட்டு செல்வதுண்டு. குளிர் காலத்தில் இவர்கள் என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை.





5
Jan
'05

A Series of Unfortunate Events. Whoever created the last picture had good imagination even though he forgot some details.





3
Jan
'05

Egyptian archaeologists made a stunning discovery Monday, unearthing “skeleton people”.

“What’s puzzling about this,” Cambridge University archaeologist Sir Ian Edmund-White said, “is that skeletons would not benefit from harvested crops, as any food taken orally would immediately fall through the hole behind the jaw…





2
Jan
'05

For those who have seen both the movie LOTR and read the book here is a list of nit picking on the movie’s differences with the book. I found the movie to be a great presentation of the story.





2
Jan
'05

Very intersteing thread if you are looking for buying a house in USA. There are posts from many states with pictures of the house you can buy for $200,000.





கடலோரத்தில் ஒரு கிராமம். பக்கத்தில் ஒரு சின்ன மலை. பெரும்பாலான மக்கள் கடல் பக்கத்தில் மலை அடிவாரத்தில் தான் வசித்து வந்தனர். ஒருவர் மட்டும் மலை உச்சியில் குடியிருந்தார். அவர் கீழே உள்ள மக்களுக்கு பல உதவிகள் செய்து வருவார். ஊர் மக்கள் எல்லாரும் அவரிடம் நல்ல மதிப்பு வைத்திருந்தனர்.

ஒருநாள் மலை உச்சியில் இந்த பெரியவர் கடலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த போது திடீரென்று கடல் நீர் பின்னால் போவதை பார்த்தார். அவருக்கு இந்த மாதிரி கடல் பின் வாங்கினால் மீண்டும் பெரிதாக பொங்கும் என்று தெரிந்திருந்தது. ஆனால் அவர் மலை மேலிருந்து கீழே வந்து எல்லோரையும் கூட்டிக்கொண்டு மீண்டும் மலை மீது ஏற நேரம் இல்லை.

அதனால் உடனே தன் வீட்டிற்கு நெருப்பு வைத்து விட்டார். மலை மேல் அவர் வீடு பற்றி எரிவதைப் பார்த்த ஊர் மக்கள் அவருக்கு உதவி செய்ய மலைக்கு அவசரமாக ஏறி வந்தனர். அவர்கள் மலைக்கு மேலே வந்தவுடன் கீழே கடல் பொங்கி ஊரை அழித்துக் கொண்டு போய் விட்டது.





1
Jan
'05

From top of prudential tower.

Taxis waiting in line.