பாஸ் எங்க அவங்க?
போயிட்டாங்க.
அப்பவே நினைச்சேன். ச்சே இவ்வளவு நீளமாவா தொடரும் போடுவாங்க. இனி எப்போ வருவாங்களோ. சரி எதுக்கு வந்தாங்க?
அவங்ககிட்ட கொஞ்சம் விவரங்கள் கேட்டிருந்தேன். அதை கொடுத்துட்டு போறாங்க. அதான் இந்த பைல்.
டேபிளின் மேல் இருந்த ஊதா நிற பைலை காட்டினான்.
என்ன விவரம் பாஸ். கொஞ்சம் விவரமா சொல்லுங்க.
அவங்களோட நண்பர்கள் பக்கத்து வீட்டுக்காரங்க பத்தி அவங்களுக்குத் தெரிஞ்சது. அவங்களோட கேஸ் தான் நாம இப்ப வேலை செய்யறோம்.
ஆஹா. அப்ப மறுபடி கட்டாயம் வருவாங்க.
சொல்ல முடியாது. கேஸ் முடிஞ்சா வரலாம். இந்த மாதிரி டிடெக்டிவ் ஏஜன்சிக்கு போறது யாருக்கும் வெளியில் தெரியக் கூடாது.
சரி அவங்களுக்கு என்ன தான் பிரச்சினை பாஸ்.
அதையெல்லாம் போகப் போக மெதுவா சொல்வாங்க கதையில.
ஏதோ திரைக்கதை எழுதறாப்பல நினப்பு.
என்ன?
ஒண்ணும் இல்லை பாஸ். என்ன பிரச்சினைனு சொல்லிட்டீங்கன்னா மறுபடி தொடரும் போட்டுரலாம்.
கொஞ்ச நாளா அவங்களுக்கு யாரோ பின் தொடர்ந்து வர்ர மாதிரி இருக்காம். ஆனா யாரையும் குறிப்பா சொல்ல முடியல அவங்களால. வீட்லயும் ஏதோ சத்தம் எல்லாம் கேட்குது. ஆனா வீட்ல வேற யாரும் இல்லை.
பாஸ் வேற யாராவது பொண்ணுங்க கதைல வருவாங்களா.
எதுக்கு.
சும்மா ஒரு பேச்சுக்கு தான் கேட்டேன். இது போற போக்கே சரியில்லை. அப்புறம்.
அந்த பொண்ணு தனியா தான் இருக்காங்க. போலீஸுக்கு போனா இந்த மாதிரி எல்லாம் சொன்னா நாங்க என்ன பண்றது, போய் நல்ல சைக்காலஜிஸ்டா பாருன்னு அனுப்பிட்டாங்களாம். அதான் நம்ம கிட்ட வந்திருக்காங்க.
ரொம்ப பயந்து போயிருக்காங்க.
பாஸ் உங்களுக்கு சைக்காலஜி தெரியுமா?
விளையாடாத. சைக்காலஜிஸ்ட் தான் நம்ம கிட்ட அனுப்பி இருக்கார். சரி, போய் வண்டிய ரெடி பண்ணு. நாம சைக்காலஜிஸ்ட பாக்க போறோம்.
போற வழியில அவங்கள பத்தி இன்னும் கொஞ்சம் விவரம் சொல்லுங்க.
இரண்டு பேரும் மாருதியில் கிளம்பினார்கள்.
தொடரும்
பாஸ் ஏதோ துப்பறியப் போறீங்களாமே என்னது அது.
அது தான் சஸ்பென்ஸே. அத இப்பவே சொல்லிட்டா அப்புறம் நம்மள யாரு படிப்பாங்க. அது என்னனு நீ கண்டு பிடிக்கணும். அது தான் உனக்கு ட்ரெயினிங்.
பாஸ் ஒரு கேள்வி கேட்டா தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே?
கேளு கேளு நிறைய கேள்வி கேட்டா தான் அறிவு வளரும்.
பாஸ் எல்லா டிடெக்டிவ் ஏஜன்ஸிலியும் அழகான பொண்ணு தான அஸிஸ்டன்டா இருப்பாங்க. உங்க ஆபீஸ்ல மட்டும் …
அவங்கெல்லாம் இருந்தா கவனம் சிதறி சரியா வேலை செய்ய முடியாது. கவனிக்கிறது தான் ரொம்ப முக்கியம் இந்த வேலைல.
மனசுக்குள், … நமக்கெல்லாம் இந்த மாதிரி தான் வந்து மாட்டுது.
சே. ஏதாவது பெரிய எழுத்தாளர்ட்ட சேந்திருக்கிலாம். இந்த கதையில் பொண்ணுங்க வருவாங்களா இல்லையானே தெரியல.
பாஸ் நம்ம கதைய அட்லீஸ்ட் நிறைய பொண்ணுங்களாவது படிப்பாங்களா.
யாருக்கு தெரியும்.
எதுக்கும் என்கிட்ட வசனம் பேசறப்போ என்னைப் பத்தி கொஞ்சம் நல்லதா சொல்லுங்க. என்னோட ரசிகைகளின் மனத புண் படுத்திறாதீங்க.
க்கும். இன்னும் கதைல முதல் பத்தியே முடியல அதுக்குள்ள ரசிகைகள் பத்தி நினைப்பா?
பாஸ் எல்லா கதையிலயும் ஊட்டி கொடைக்கானல் கோவா இந்த மாதிரி இன்வெஸ்டிகேசனுக்கு போவாங்களே நாமளும் அந்த மாதிரி போவோமாஆ ஊர்கோலம்.
என்ன அவசரம் முதல்ல லோக்கல் இன்வெஸ்டிகேசன் முடிச்சிட்டு அப்புறம் தான் இந்த லொக்கேசன் எல்லாம்.
அப்ப சீக்கிரம் வேலைய ஆரம்பிங்க. இந்த மாதிரி இடத்தையெல்லாம் பத்தி எழுதினா தான ஒரு சுவாரசியம் இருக்கும்.
இங்க நான் பாஸா நீ பாஸா.
சாரி பாஸ். பாஸ் வாசல்ல யாரோ.. அய்யோ அதுக்குள்ள கதையில் அழகான பொண்ணு. பாஸ் பிளீஸ் தொடரும் போடுங்க நான் போய் முகத்தைக் கழுவிட்டு ரெடியாகி வந்திடுறேன்.
ம்ம். நேரம்.
1:19 AM. தொடரும்.
Interesting interview with Vladimir Kramnik. The amount of preparation required is unbelievable. I wish there is one organization with one unified world champioship match.