Today I saw a bumper sticker which read, “Let us not elect Bush in 2004 either”.
Googled on it and found more stuff.
நான் காலேஜில் படிக்க ஆரம்பித்ததிலிருந்து பல வகையான ப்ரொகிராமர்களைப் பார்த்திருக்கிறேன். எனக்கு பிடித்தவர்கள் எதையும் முழுமையாக செய்யக் கூடியவர்கள். இவர்கள் ஏதாவது ப்ரொகிராம் எழுதினால் அதை அப்படியே எந்த தடங்கலும் இன்றி முழுதாக அடுத்தவர்களும் உபயோகிக்கிற மாதிரி எழுதுவார்கள். இவர்களுக்கு பெரும்பாலும் இது இயல்பாகவே அமையும். இவர்கள் கணிணித்துறையைச் சேராமலே கூட இருக்கலாம். உதாரணத்திற்கு அல்ட்ராஎடிட் என்ற எடிட்டர் எழுதியவரின் கதை. இவர் தான் கற்றுக்கொள்வதவற்காக எழுதிய எடிட்டர் பின்னர் நண்பர்கள் மூலம் பரவி இப்போது உலகெங்கும் 120 நாடுகளில் விற்கப்படுகிறது. இப்பொழுது காசி உருவாக்கியிருக்கும் தமிழ்மணமும் அப்படித்தான்.
வேறு சிலர் எல்லாவற்றையும் தானே கற்றுக்கொண்டு புதிது புதிதாக ஆரம்பிப்பார்கள். ஆனால் எதையும் மேலே சொன்ன மாதிரி முழுதாக முடிக்க மாட்டார்கள். புதிதாக ஏதாவது தொழில் நுட்பம் வந்தால் அதைக் கற்றுக் கொள்ளும் வரை ஆர்வம் இருக்கும். அதற்காகவே ஒரு புது முயற்சியைத் தொடங்கி முடிந்த வழிகளில் எல்லாம் அதைக் கற்றுக் கொண்டு விட்டு இறுதியில் எல்லாம் கற்றுக் கொண்டதும் ஆர்வம் வடிந்து போய் முயற்சியை கைவிட்டு விடுவர். உதாரணத்திற்கு நான் எழுதிய தமிழ் எடிட்டர். மொசில்லாவில் எப்படி ஒரு ப்ரொகிராம் எழுதுவது என்று கற்றுக் கொண்ட பின்னர் ஆரம்பித்து வேலை செய்ய வைத்தாயிற்று. ஆனால் எல்லாரும் உபயோகிக்கிற மாதிரி எளிமை மற்றும் முழுமை கிடையாது. இப்பொழுது அதை மேம்படுத்த அவ்வளவு ஆர்வம் இல்லை. ஆனால் இன்னும் அதை உபயோகித்துதான் தமிழ் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
பெரும்பாலாவனவர் தன் கையே தனக்குதவி என்று எப்படி இடர்ப்பாடு வந்தாலும் எப்படியாவது தாங்களாகவே வழி கண்டு பிடித்து வேலையை முடித்து விடுவர். இம்மாதிரி ஆட்கள் தான் கணிணி துறையில் நிலைத்து நிற்க முடியும். மற்றவர்கள் சீக்கிரம் மேனேஜர் ஆகாவிட்டால் கஷ்டம் தான். மேனேஜர் ஆனபின் மற்றவர்க்கு கஷ்டம். கல்லூரியிலேயே அசைன்மென்ட் காப்பி அடிப்பதிலிருந்து எதற்கெடுத்தாலும் அடுத்தவர் உதவியை எதிர் பார்க்கும் பழக்கம் வந்து விடுகிறது. இணைய குழுக்களில் அடிக்கடி எனக்கு இந்த மாதிரி ஒரு ப்ரொகிராம் வேண்டும் இரண்டு நாட்களுக்குள், அனுப்பவும் என்று மாணவர்களிடமிருந்து நிறைய வருகிறது. இப்படி ஆர்வம் இல்லாமல் படிப்பவர்கள் எந்த ஆர்வத்தில் வேலை செய்வார்கள்?
கணிணி துறையில் வல்லுனராக ஆசைப்படுவருக்கு: முதலில் முடிந்தவரை எதையும் நீங்களாகவே செய்து பழகுங்கள். கணிணியில் எதாவது வேலை செய்யவில்லையானால் முதலில் ‘சார்’ என்று கூவினால் ஒன்றும் கற்றுக் கொள்ள முடியாது. ஏதாவது புதிய தொழில் நுட்பம் அல்லது, ப்ரொகிராமிங் லாங்குவேஜ் கற்றுக் கொள்ள விரும்பினால் அதில் செய்வதற்கு தகுந்த மாதிரி ஏதாவது ப்ராஜெக்ட் எடுத்து நீங்களாகவே செய்யுங்கள். புத்தகம் மட்டும் வைத்து படித்தால் கடைசிப் பக்கம் வரும் முன்னால் எல்லாம் மறந்து விடும். வேறு துறையில் கணிணி உபயோகிப்பவர் என்றால் முடிந்தவரை தேவை உள்ளதை மட்டும் கற்றுக் கொண்டு உப்யோகியுங்கள். உதாரணத்திற்கு எழுத்தாளர் என்றால் எழுத்து தான் முக்கியம். அதை எப்படி எளிதாக பதிப்பிப்பது, மற்றும் சில அடிப்படை கணிணி விவரங்கள் தெரிந்தால் போதும். மற்றபடி கிராபிக்ஸ் அழகாக இருக்கிறதே கிராபிக்ஸ் படமும் நானே போடுகிறேன் என்று அதைப் படிக்க ஆரம்பித்தால் அது நேர விரயம்.
உடம்பு சரியில்லாமல் இருக்கும் போது தான் நிறைய உலக சிந்தனைகள் வரும். நம்மை அக்கரையாக விசாரிக்கும் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள். ஆஹா எல்லாரும் எவ்வளவு நல்லவர்கள் என்னுடைய நலத்தைப் பற்றிக் கவலைப்படுகிறார்கள். ஆஸ்பத்திரி பக்கம் போனால் டாக்டர் நர்ஸைப் பார்த்தால் சே எவ்வளவு நல்ல சேவை செய்யக் கூடிய தொழில். எவ்வளவு அன்பாகப் பேசுகிறார்கள். கவனிக்கிறார்கள். என்ன தான் இன்ஸூரன்ஸ் காசு குடுத்தாலும் இந்த மாதிரி நம்மூரில் கவனிப்பார்களா? நமக்கு இவ்வளவு நன்றாக கவனித்துக்கொள்ள முடிகிறது. இதற்கு வசதி இல்லாதவர்கள், ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் எவ்வளவு பாவம். அவர்கள் உடம்பு சரியில்லை என்றால் என்ன செய்வார்கள். நம்மூரிலாவது அரசாங்க மருத்துவமனை இருக்கிறது. இங்கு இன்ஸூரன்ஸ் இல்லாவிட்டால் மருத்துவமனை பக்கமே போக முடியாது. இது கூட பரவாயில்லை, சாப்பாடு இல்லாமல் எத்தனை பேர் உலகத்தில் கஷ்டப்படுகிறார்கள். ஏன் இறைவா எல்லாரையும் இவ்வளவு கஷ்டப்படுத்துறேனு கேட்கத்தோணும். அப்புறம் மருந்து மாத்திரைகள் எல்லாம் வேளாவேளைக்கு முழுங்கி உடம்பு கொஞ்சம் சரியான பின் இறைவா ரொம்ப நன்றி, இனிமேல் எல்லாருக்கும் உதவி செய்ய வேண்டும் முடிந்தவரை யாரையும் கஷ்டப்படுத்தாமல் இருக்க முயற்சிக்க வேண்டும் என்று தோன்றும். அப்புறம் முழுதாக சரியாகி ஆடி ஓட ஆரம்பித்தால் இறைவா நீ இருக்கிறாயா இல்லையா இருந்தால் யாராவது பார்த்திருக்க வேண்டுமில்லையா என்று விவாதம் ஆரம்பிக்கும். அப்படி இருந்தால் இதுவரை ஏன் எனக்கு லாட்டரியில் பரிசு விழவில்லை.