ஒலிம்பிக்கில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்னு டிவியை ஆன் பண்ணினேன். ஐந்தாறு பேர் சில வளையங்களோடு ஆடிக்கொண்டிருந்ததனர். என்னடா அதுக்குள்ள நிறைவு விழா ஆரம்பிச்சுட்டாங்களான்னு பார்த்தா இந்த அணி பதக்கம் வாங்காது அப்படின்னு கமென்டரி சொல்லிக்கொண்டிருந்தார். இந்த மாதிரி டான்ஸ் எல்லாம் ஒலிம்பிக்கில் ஏன் வைக்கிறார்கள் தெரியவில்லை. இது போல இன்னும் எனக்கு எதற்கு ஒலிம்பிக்ஸில் வைத்திருக்கிறார்கள் என்று புரியாத ஆட்டங்கள் நிறைய உண்டு.
டைவிங் சரி. எப்படி ஒருவர் தண்ணீருக்குள் குதிக்கிறார் என்பதை வைத்து மதிப்பெண் போடுகிறார்கள். ஆனால் ரெண்டு பேரை ஒரே நேரத்தில் குதிக்க வைத்து அதற்கு எப்படி ஒரே மாதிரி குதிக்கிறார்கள் என்று ஒரு போட்டி. நீச்சல் சரி. ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு யார் வேகமாக போகிறார்களோ அவர்களுக்கு பதக்கம். அதில் முன் பக்கமாக நீந்து, பின் பக்கம் நீந்து, வண்ணத்துப் பூச்சி மாதிரி நீந்து என்று பத்து வகை எதற்கு தெரியவில்லை. ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் என்ற பெயரில் நிறைய டான்ஸ் வைத்திருப்பதால் நம் இந்திய அரசாங்கமும் நம்மூர் கூத்து ஆட்டங்களை ஒலிம்பிக்கில் சேர்க்க சிபாரிசு செய்ய வேண்டும். பேஸ்பால் மற்றும் சாப்ட்பால் வைத்திருப்பவர்கள் கிரிக்கெட் ஏன் சேர்க்கக்கூடாது. நூறு மீட்டர் ஜெயிப்பவருக்கும் ஒரே பதக்கம் தான். பீச் வாலிபால் ஜெயிப்பவருக்கும் ஒரே பதக்கம் தான்.

இன்று காலையில் அமெரிக்கா, லித்துவேனியாவிற்கு இடையில் வெண்கலப் பதக்கத்திற்கான கூடைப்பந்தாட்டம் நடைபெற வேண்டியது. ஆனால் ஆட்டம் சரியான நேரத்திற்கு ஆரம்பிக்கவில்லை. இரண்டு அணியினரும் வெள்ளை உடையில் வந்து விட்டனர். அமெரிக்க அணியிடம் உங்களுக்கு வெள்ளை உடை இல்லை நீங்கள் வேறு நிறத்திற்கு மாற வேண்டும் என்று நிர்வாகிகள் கூறினர். ஆனால் அமெரிக்க அணியினர் அடுத்த நாள் அதிகாலையில் விமானத்தில் கிளம்ப இருந்ததால் வெள்ளை உடையைத்தவிர மீதி அனைத்தையும் மூட்டை கட்டி அனுப்பிவிட்டனர். அப்புறம் போலீஸில் சொல்லி அவர்கள் மூட்டை திருப்பி வரவழைத்து வேறு உடையுடன் ஆடி ஜெயித்து விட்டனர்.





24
Aug
'04

You might have heard lots of “Please”, “Excuse me” and “sorry”. Out of all those I have heard, hardly a few would have said it with the genuine meaning of the words. Most of the “Excuse me”,s were really substitutes for “Hey you”. You can easily spot it with the way people say “Excuse me”. Some simply shout EXCUSE ME, some pull the last part with “Excuuuse me”, some will say without realizing what they are saying with a dry excuse me. “Sorry” also falls on the same line. If you accidently hit someone on the street most would mutter an unconscious “sorry”. It will be usually a reflex action and the person would feel no where near sorry. Some might even feel angry but still suppress it with a hard sorry and a chuckle. “Please” is usually not used as a place holder. As far as I have seen it seems to be the best of all these three to be used with the proper meaning. Though sometimes orders also come with a “please”.





கதைகள்

திரில்லர்
பாழடைந்த பங்களா. நள்ளிரவு நேரத்தில் ஆள் நடமாட்டமில்லாத நேரத்தில் அவன் சென்றான். கால்கள் தானாக பங்களா நோக்கிச் சென்றன. பங்களாவைச் சுற்றிலும் எந்த பிராணியின் சத்தமும் இல்லாமல் ஒரு அமாநுஷ்ய நிசப்தம். திடீரென்று …

கிரைம்
கொலை நடந்த இடத்தில் சுற்று முற்றும் அவனுடைய தேர்ந்த கண்கள் அலசின. எந்த தடயமும் இல்லை. கைரேகை நிபுணர் எல்லாம் துடைத்த மாதிரி இருக்கிறது என்றார். மோப்ப நாய் இரண்டு சுற்று சுற்றி விட்டு படுத்து விட்டது. போலீஸ் போட்டாகிராபர் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். ப்ளாஷ் வெளிச்சத்தில் திடீரென்று மின்னிய …

காதல்
எங்கு பார்த்தாலும், கண்ணை மூடினாலும் அவளுடைய முகம் தான் கண்ணில் தெரிந்தது. மறக்க முடியுமா? மறக்கக்கூடிய உறவா அது? பல நிமிடங்கள் அவர்களுடைய பழைய இன்ப நினைவுகளில் சஞ்சரித்தான். யாரோ சார் சார் …

ஆன்மீகம்
குருவின் பேச்சை மயங்கி கேட்டுக் கொண்டிருந்தார்கள். உள்ளே வெளியே எல்லாம் ஒன்று தான். நீ, நான் அவன், அது எதற்கும் வித்தியாசமே கிடையாது. எல்லாமே சக்தி. சக்தி மனசில் இருக்கிறது. அந்த சக்தியை புரிந்து கொள்ள வேண்டும். அது தான் ஞானம். புத்தர், ஏசு எல்லாரும் … (50 வயசுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே மேலே படிக்கவும்)…

சோகம்
அவள் அழுது கொண்டிருந்தாள். (இந்த சோகம் போதும். சே இந்த கதைல ஆம்பிளைங்க அழவே மாட்டாங்களா?)

சரித்திரம்
பகல் எல்லாம் எங்கும் இளைப்பாராமல் குதிரையில் பல காத தூரம் இளங்குமரன் பயணம் செய்திருந்தான். அதனால் அந்தி வேளையில் கரை புரண்டு ஒடிய நதிக்கரையில் அந்த காட்சியைக் கண்ட பொழுது சில கணங்கள் காண்பது கனவா, நனவா என்று புரியாமல் திகைத்தான். நதி தேவதை …

அதிரடி
முன்னால் பத்து பேர் பயங்கர ஆயுதங்களோடு நின்றார்கள். இவனுடைய கையில் ஒரு கம்பு மட்டும் தான் இருந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் … (ஹீரோ ஓடிப்போனான் என்றால் அதற்கு நான் பொறுப்பல்ல)

மந்திரம்
மந்திரவாதியின் உயிர் ஏழு கடல் எட்டு மலை தாண்டி இருந்த ஒரு மாமரத்தில் இருந்த ஒரே ஆப்பிளில் இருப்பதாக ராஜரிஷி தன்னுடைய சக்தியால் அறிந்து சொன்னார். சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்யன் அந்த வழியாக சென்ற ஒரு புஷ்பக விமானத்தில் லிஃப்ட்…

திரைக்கதை
காலேஜில் படிக்கும் இளைஞன். முதல் காட்சியில் மட்டும் வந்து விட்டுப் போகும் வகுப்பறை. நண்பர்களுடன் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். தன்னோடு மோதிய மாணவியுடன் காதல். அப்புறம் உலகமெல்லாம் சுற்றி ஒரு பாடல். உலகம் சுற்றி டயர்டாக திரும்பி வந்திருப்பதை அறிந்ததும் வில்லன் …

ஏதோ ரியலிஸம்
அப்போது தான் பிறந்தவன் மாதிரி எல்லாவற்றையும் புதிதாக உற்று பார்த்தான். காற்றில் கைகளை துளாவினான். காற்றில் எல்லாம் மிதந்தன. கைகளைத்தூக்கினான். கீழே வராமல் அப்படியே பக்கத்தில் மிதந்தன. சுற்றிலிருமிந்தவர்கள் அவனுடைய வியப்பை பார்த்து சிரித்தார்கள். அவர்களுக்குத்தெரியும். இப்படி ஒருவன் வருவானென்று. மறுபடி வந்திருக்கிறான். இனிமேலும் … (ஏதாவது புரிஞ்சா எனக்கும் கொஞ்சம் சொல்லுங்க.)





12
Aug
'04

How much happiness can you buy with money? Or asking in a different way how much money do you think you need for happiness? Everybody has different kinds of needs. So let us take an average man with average needs. Is there a limit beyond which earning money does not increase your happiness or satisfaction? Some survey says the limit is at $40,000. I do not know how they came up with that figure. Have you ever had a fixed limit on your earnings target? Try reading this intersting article Millions won’t make you happier.





இணையத்தில் சில நேரம் அமேசான்அமேசான் தளத்திலோ அல்லது ஈபே (ebay) தளத்திலோ மின் சாதனங்களை மேய்ந்து கொண்டிருப்பது உண்டு. சிலருக்கு அவ்வப்போது ஏதும் வாங்க விட்டாலும் Best Buy அல்லது Circuit City சென்று புதிதாக வந்துள்ள அயிட்டங்களை சரி பார்க்கா விட்டால் தூக்கம் வராது. ஆனால் ஒவ்வொரு முறை இந்த இணைய தளங்களுக்கு செல்லும் போதும் எனக்கு அங்குள்ள விற்பவர் வாங்குபவருக்கு உள்ள மதிப்பெண் முறை ஆச்சரியத்தை ஏற்படுத்தும். விற்பவர் யாராவது ஒருவரை சரியாக நடத்தா விட்டாலும், அவருடைய பின்னூட்டத்தால் விற்பவருடைய வரவு பாதிக்கும். விற்பனையாளர்களின் மதிப்பெண்களை படிக்கும் பொழுது நான் பெங்களூரில் டிவி வாங்கிய அனுபவம் தான் நினைவுக்கு வரும்.

நானும் என்னுடன் தங்கியிருந்த நண்பனும் டிவி வாங்க CMH ரோட்டில் இருந்த ஒரு கடைக்குச் சென்றோம். கடை பெயர் ஞாபகம் இல்லை. கடையில் வேலை செய்பவர்கள் நிறைய பேர் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் எங்களிடம் வந்து அங்கிருக்கும் டிவிகளின் அருமை பெருமைகளை விளக்கினார். எங்களிடம் வாகனம் எதுவும் இல்லாததால் வீட்டிற்கு எடுத்துச் செல்ல ஏதாவது உதவி செய்வீர்களா என்று கேட்டோம். எல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்வோம். இங்கு டிவி வாங்கினால் நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம் என்று கூறி எந்த டிவியை எங்கள் தலையில் கட்டுவது என்று மும்முரமானார். அப்புறம் ஒரு சோனி டிவியை தேர்வு செய்த பின் பணம் எங்கே கட்ட வேண்டும் என்று கூறி விட்டு கடையில் ஒரு இடத்தில் போய் உட்கார்ந்து கொண்டார். நாங்கள் பணம் கொடுத்து விட்டு அவரிடம் போய் வீட்டுக்கு எடுத்துச்செல்ல எங்களுக்கு உதவி வேண்டும் என்று கேட்டால், அதெல்லாம் உங்கள் பொறுப்பு. நான் இங்கே விற்பனையாளர் மட்டும் தான் என்று கூறி விட்டு அதற்கப்புறம் நாங்கள் இருந்த பக்கம் திரும்பிக் கூட பார்க்கவில்லை. அப்புறம் நாங்களே போய் ஒரு வேன் பிடித்து வந்து டிவியை வீட்டுக்குக் கொண்டு வந்தோம். அதற்கப்புறம் அந்த கடைப்பக்கம் எட்டிப் பார்ப்பதில்லை. தெரிந்த நண்பர்களிடமும் சொல்லி அங்கு போக வேண்டாம் என்று எச்சரித்து விட்டோம். முதலிலேயே அவர்கள் நீங்கள் தான் எடுத்துச் செல்லும் வேலையை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று உண்மையைச் சொல்லியிருந்தால் எந்தப் பிரச்சினையும் வந்திருக்காது. எந்த விசயத்திலும் பொய் சொல்லுகிறவர்களிடம் பொருள் வாங்க நிச்சயம் தயக்கம் தான் வரும். நம்மூரில் வியாபாரம் செய்பவர்கள் நிறைய பேருக்கு வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள தெரியவில்லை. இந்த வாடிக்கையாளர் உலகத்தில் எதிர்காலத்தைப் பற்றி யோசிக்காமல் அந்த வியாபாரத்தை எப்படி என்ன பொய் சொல்லி முடிக்கலாம் என்று நினைத்தால் வெகு நாளைக்கு அந்த வியாபாரம் நீடிக்காது.

நான் பெங்களூரில் இருந்த வரை அவ்வப்போது செல்லும் கடைகளில் சிரித்த முகத்துடன் வேலை செய்பவரை பார்த்ததேயில்லை. வெண்டிங் மெசினுக்கும் அவருக்கும் வித்தியாசம் இல்லாத நிலையில் தான் நிறைய பேர் நடந்து கொள்வார்கள். பொருள் ஒரு ரூபாய்க்கு குறைவாக இருந்தாலும் ஏதாவது குறை இருந்தால் திருப்பி குடுத்துப் பாருங்குள். ஒன்றும் நடக்காது. ஏதோ லாட்டரியில் உங்களுக்கு பரிசு விழாமல் நீங்கள் குடுத்து வைத்தது அவ்வளவு தான், நான் என்ன செய்வது என்ற ரீதியில் அல்லது, அந்த கம்பெனியின் பொறுப்பு அது, அவர்களிடமே போய் பேசிக் கொள்ளுங்கள் என்று பேசுவார்கள். சாப்பாடு ஒன்றில் தான் நல்ல போட்டி இருக்கிறது. அதனால் விலைக்கு ஏற்ற தரம் அல்லது வசதி இருக்கிறது. மற்ற வியாபாரங்களிலும் இப்போது போட்டி வளர்கிறது.





2
Aug
'04

As the election is getting closer almost everyday there is a poll result about who has more percentage among Kerry and Bush. Every result is different. It also keeps changing after every event like the democratic convention. I find these poll percentages a bit interesting. I wonder where they do the survey and who answers their questions. No one has ever asked me any survey question. Among these voting polls there are also polls going in more detail like how many think who is more compassionate or who is more honest etc. I dont know after the election whether anybody checks these numbers. The numbers at Time are different than the one at Gallop. American Research Group, Inc. has a nice chronology of poll results. Looks like all the undecided voters are going for Kerry. What is Bush doing?

10 useful rules I found while browsing for poll results.