கொஞ்ச நாளா ரெகுலரா எதுவும் எழுதவில்லை. இந்த மொசில்லாவில் புது மென்பொருள் எழுதுவது எப்படி என்று கற்றுக்கொள்வதில் பெரும்பகுதி நேரம் போய் விட்டது. பத்தோடு பதினொன்றாக இன்னொரு தமிழ் எடிட்டரும் கிட்டத்தட்ட தயார். இதில் என்ன விசேசம் என்னவென்றால் எடிட்டர் மொசில்லா உலாவியிலேயே ஒரு தனி பக்கத்தில் இருக்கும். இந்த பதிவை மொசில்லா எடிட்டரில் தான் எழுதுகிறேன். இந்த எடிட்டரை முழுக்க நான் எழுதவில்லை. mozedit என்று ஏற்கனவே இருந்த எடிட்டரில் தமிழை நுழைத்து விட்டேன். இன்னும் எல்லோரும் எளிதில் உபயோகிக்கிற மாதிரி இன்ஸ்டாலர் எழுத வேண்டும். அப்புறம் FireFox, தமிழா பிற ஆபரேட்டிங் சிஸ்டம் இவற்றில் சோதனை செய்ய வேண்டும். இன்னும் மெனு பெயர்கள் எல்லாம் மொழிபெயர்க்கவில்லை. mozedit எழுதியவரிடமும் அனுமதி கேட்டுள்ளேன்.





26
May
'04

New England must have been chosen to be the weather lab of God. It was like hot summer last week and the temperature was climbing steadily in the beginning of May. Suddenly He decided to repaint everything. This week it is below 50. Weather.com says the weekend is going to be sunny and >75. I am waiting.





ஒரு வாரம் சோம்பேறித்தனத்தால் வலை பதியவில்லை.

எப்போது எப்போது என்று காத்திருந்து கடைசியாக இப்போது தான் கொஞ்சம் நல்ல செய்தி சொல்லியிருக்கிறார்கள். யாஹீ தன்னுடைய ஈமெயிலில் இட வசதியை அதிகரிக்கப்போகிறது. எப்படியும் செய்து விடுவார்கள் என்று தெரியும். கூகிள் 1 GB கொடுக்கும் போது இவர்கள் வாயை மூடிக்கொண்டிருந்தால் ஈமெயில் வசதியை மூடிக்கொண்டு போக வேண்டியது தான். இப்போது வருகிற எரிதங்களுக்கு மட்டும் 1 GB வேண்டியிருக்கிறது. இனிமேல் ஒரு வாரம் ஈமெயில் பார்க்காமலிருந்தாலும் தபால் பெட்டி நிறையாது என்று நம்பலாம்.