ஈமெயிலில் கடைப்பிடிக்க வேண்டிய சில நல்ல பழக்கங்கள்.
ஆங்கிலத்தில் எழுதும் போது எல்லா எழுத்துக்கும் CAPITALS உபயோகிக்காதீர்கள்.
மற்றவர்களைக் குறிப்பிடும் போது அவர் எழுதிய வேண்டிய கருத்துக்களை மட்டும் விட்டு மற்றவற்றை முடிந்த வரை நீக்கி விடுங்கள். இல்லை என்றால் அனுமார் வால் போல நீண்டு கொண்டே போகும்.
தேவை இல்லாமல் HTML வைத்து அனுப்பாதீர்கள். HTML இல்லாமல் படிக்கும் ஈமெயில் மென்பொருள்கள் நிறைய உண்டு. அவர்கள் உங்களை சபிப்பார்கள்.
URGENT, IMPORTANT என்ற வார்தைகளை முடிந்தவரை தவிர்க்கவும்.
subject வரியில் Hi, Hello சொல்லாமல் உங்கள் மெயிலைப் பற்றி எழுதுங்கள்.
கீழே கையெழுத்துப் பகுதியை இரண்டு மூன்று வரிகளுக்கு மேல் போகாமல் வைத்துக்கொள்ளுங்கள்.
தேவையில்லாமல் பெரிய பெரிய கோப்புகள், படங்கள் அனுப்புவதை தவிருங்கள். முக்கியமாக இதை பெரிய குழுக்கு அனுப்பாதீர்கள்,
ஈமெயிலில் நாவல் எழுதாதீர்கள். முடிந்தவரை குறைந்த அளவு வார்த்தைகள் உபயோகிக்கவும்.
யாராவது உங்களது பார்வைக்கு மட்டும் ஈமெயில் அனுப்பினால் அதை யாருக்கும் அனுப்பாதீர்கள். ரகசியம் உங்களிடம் இருக்கும் வரைக்கும் தான்.
ஒத்திப்போடாமல் முடிந்தவரை உடனே பதிலளிக்க முயலுங்கள்.
ஏதாவது கேள்விகள் இருந்தால் எல்லா கேள்விக்கும் பதில் அளிக்கவும்.
ஈமெயில் காணாமல் போக வாய்ப்பு உண்டு. ஆனால் அதை சாக்காக சொல்லாதீர்கள். அதற்கு வாய்ப்பு மிகமிக குறைவு.
ஏதாவது சத்தமாக பேச மாட்டீர்கள் என்றால் அது ஈமெயிலில் அனுப்புவதற்கும் உகந்ததல்ல.
அனுப்பும் முன்னால் நீங்களே ஒரு தடவை படித்துப் பாருங்கள்.
ஈமெயிலில் ஹெட்டர்ஸ் என்று ஒரு பகுதி உண்டு. சாதாரணமாக நாம் ஈமெயில் படிக்கும் பொழுது மேலே தலைப்பில் அது எப்போது வந்தது, யார் அனுப்பியது, யாருக்கு அனுப்பப்பட்டது என்ன பொருள் என்ற விவரங்கள் இருக்கும். ஆனால் இதற்கு மேலும் சில விவரங்கள் ஈமெயிலில் இருக்கும். நாம் கேட்காமல் பெரும்பாலான ஈமெயில் வாசிக்கும் மென்பொருள்கள் அதை காண்பிக்காது. இதை Full Headers என்று குறிப்பிடுவார்கள். எப்போதாவது நேரம் கிடைக்கும் போது இதைப் பார்த்து என்ன மாதிரி மேல் விவரங்கள் இருக்கின்றன என்று பாருங்கள். நீங்கள் yahoo உபயோகிப்பவர் என்றால் வலது பக்கம் ஓரத்தில் இந்த Full Headers என்ற சுட்டி இருக்கும்.
Brief Headers
From: some friend” abc@sewrowqrknqwrkn.com
Date: Tue, 27 Apr 2004 19:06:26 -0700
To: youraddress@somedomain.com
CC: somebodyelse@someotherdomain.com
Subject: something irrelevant
Full Headers
From: some friend” abc @sewrowqrknqwrkn.com
Date: Tue, 27 Apr 2004 19:06:26 -0700
To: youraddress@somedomain.com
CC: somebodyelse@someotherdomain.com
Subject: something irrelevant
X-Apparently-To: youraddress@somedomain.com via xxx.xxx.xxx.xxx; Tue, 27 Apr 2004 19:30:26 -0700
Return-Path: abc@sewrowqrknqwrkn.com
Received: from xxx.xxx.xxx.xxx (somedomainname.com) (xxx.xxx.xxx.xxx) by yourmailer.somemachine.com with SMTP; Tue, 27 Apr 2004 19:30:01 -0700
Received: from somedomainname.com (localhost [127.0.0.1]) by somedomainname.com with ESMTP id i3S2F23C001652; Tue, 27 Apr 2004 19:23:01 -0700 (PDT)
Some more Received lines like this….
Mime-Version: 1.0 (Apple Message framework v613)
In-Reply-To: domainame
References: domainname
Content-Type: text/plain; charset=US-ASCII; format=flowed
Message-Id: somedomainname
Content-Transfer-Encoding: 7bit
From: some friend” abc@sewrowqrknqwrkn.com
Date: Tue, 27 Apr 2004 19:06:26 -0700
To: youraddress@somedomain.com
X-Mailer: Apple Mail (2.613)
CC: somebodyelse@someotherdomain.com
Subject: something irrelevant
X-BeenThere: somemail id
X-Mailman-Version: 2.1.4
Precedence: list
Reply-to: abc@sewrowqrknqwrkn.com
some more info if it is a mailing list ….
Content-Length: 918
மேலே உதாரணத்திற்கு ஒரு ஈமெயிலில் இருந்த ஹெட்டர்களை காட்டியுள்ளேன். உங்கள் நண்பர் யாராவது அனுப்பிய ஈமெயில் எடுத்து பார்த்தால் அவருடைய ஈமெயிலில் எல்லாவற்றிலும் பெரும்பாலான ஹெட்டர் தகவல்கள் ஒரே மாதிரி இருக்கும். சரி இதெல்லாம் தெரிந்து என்ன ஆகப் போகிறதுன்னு கேட்கும் முன்னால் எதற்கு என்று சொல்லி விடுகிறேன்.
எல்லா இடத்திலும் விஷமிகள் உண்டு. இந்த மாதிரி ஆட்கள் முதலில் கம்ப்யூட்டர் கொஞ்சம் கற்றுக்கொண்டதும் இந்த ஆள் மாறாட்ட விளையாட்டு தான் விளையாடுவார்கள். உங்கள் நண்பர் பெயரில் யாரும் ஏடாகூடாமாக ஈமெயில் அனுப்பியிருந்தால் முதலில் Full Headers பார்த்து அவர் தானா என்று உறுதி செய்து கொள்ளுங்கள். இந்த ஆள் மாறாட்டம் செய்வது மிகவும் எளிது என்பதால், திடீரென நண்பரோ, நண்பியோ வித்தியாசமாக ஈமெயில் அனுப்பியிருந்தால் பதில் எழுதும் முன் அவர் தான் அனுப்பியதா என்று உறுதி செய்து கொள்ளுங்கள். அடுத்தவர் பெயரில் யார் வேண்டுமானால் ஈமெயில் அனுப்பலாம் என்பதை மட்டும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த பதிவு கம்ப்யூட்டரைப் பற்றி அதிகம் தெரியாதவர்க்கு.
அடிப்படையாக தெரிந்து கொள்ள வேண்டியவை:
கம்ப்யூட்டரை கட்டாயம் பிரித்து மாட்டத் தெரிந்திருக்க வேண்டும். பிரிக்கிறதுன்னா மொத்தமா அக்கு வேறா ஆனி வேறா கழட்டறதில்லை. முக்கிய உபகரணங்களான மோனிட்டர், மௌஸ், கீ போர்ட் இவற்றை எல்லாம் கம்ப்யூட்டரில் இருந்து பிரித்து மாட்டத் தெரிந்திருக்க வேண்டும். இது செய்வது ஒண்ணும் பெரிய வேலையில்லை. வீட்டில் பல்பு ப்யூஸ் போயிருந்தால் மாட்டத் தெரிந்தால் போதும். இதைக் கற்றுக் கொள்ளலாம். ஒரு வயரும் தப்பான பிளக்கில் பொருந்தாது. அவ்வளவு எளிதில் எதையும் நீங்கள் பாழாக்க முடியாது. அதனால் இதுவரை செய்ததில்லை என்றால் ஒருமுறை செய்து பாருங்கள்.
எப்போதாவது கால் லேசாக தட்டி ஏதாவது வயர் லூசாகியிருக்கும். வயரிங் தெரிந்திருந்தால் உதவிக்கு ஆள் தேடுமுன் நீங்களே முதலில் அதையெல்லாம் சரி பார்க்கலாம். இல்லாவிட்டால் லூசான வயரை சரி செய்து விட்டு மதர் போர்ட் போய் விட்டது சார் என்று பொய் சொல்லி ஏகத்துக்கும் மிளகாய் அரைத்து விட்டுப் போவார்கள்.
சாதாரண உபயோகிப்பிற்கு ஹார்ட்வேரில் இவ்வளவு தெரிந்திருந்தால் போதும்.
அப்புறம் சாப்ட்வேர். இதை நீங்கள் படிக்கிறீர்கள் என்றால் கட்டாயம் உங்களுக்கு இன்டர்னெட், ஈமெயில் உபயோகிக்கத் தெரிந்திருக்கும்.
ஈமெயிலில் சில செய்யக் கூடாதவை
1. எக்காரணம் கொண்டும் நீங்களாக கேட்காமல் உங்களுக்கு வந்த மெயிலில் ஏதாவது ஃபைல் கூட வைத்து அனுப்பியிருந்தால் அதை திறந்து பார்க்காதீர்கள். வைரஸ் பரவும் முக்கிய ஊடகம் ஈமெயில் கூட வரும் கோப்புகள் தான். கட்டாயம் திறந்து பார்க்க வேண்டும் என்று கை அரித்தால் அனுப்பியவரிடம் முதலில் என்ன அனுப்பியிருக்கிறாய் என்று ஒரு வார்த்தை கேளுங்கள்.
2. எந்த ஈமெயிலும் இதை உடனே தெரிந்தவர்க்கெல்லாம் அனுப்புங்கள் என்று குறிப்பிட்டிருந்தால் அதை யாருக்கும் அனுப்பாதீர்கள். இவ்வகை ஈமெயில்கள் 99 சதவீதம் புரளிகள்.
அடுத்த பதிவில் மேலும் ஈமெயில் பற்றி.
Finally filed my taxes. Do you know that for Massachusetts state tax, in the tax form there is an option to pay tax at a higher rate of 5.85% instead of 5.3%?
நாம பல பேர் முதல்ல கம்ப்யூட்டர காலேஜிலேயோ, ஸ்கூலிலேயோ முத முதலா பட்டிக்காட்டான் முட்டாய்க்கடையைப் பாத்த மாதிரி தான் பாத்திருப்போம். காசி சொன்ன மாதிரி கண்ணாடி பொட்டிக்குள்ள வச்சி யாரும் தொடாம சாமி கும்பிடுவாங்க. அப்புறம் உபயோகப் படுத்த ஆரம்பிச்ச பிறகு மெல்ல மெல்ல எந்த எடத்தில எந்த கீ அழுத்தனும், மௌஸில் எந்த பட்டன் அழுத்தனும்னு பழகும். ஓப்பன் சோர்ஸ் வயிற்றெறிச்சல் கொட்டி எவ்வளவோ சம்பாதித்தாலும் பில் கேட்ஸ் புண்ணியத்தில் வந்த விண்டோஸ் உபயோகிக்க ராக்கெட் அறிவியல் தெரிய வேண்டியதில்லை. இருந்தாலும் முதல்ல எதுனா தப்பான கீ அல்லது பட்டன அழுத்திட்டா பாழாய்ப்போய்டுமோனு பயந்து பயந்து எனக்கு வலிக்குமோ உனக்கு வலிக்குமோனு சாதுவா அதை நாய் பழக்கிற மாதிரி தான் கையாள்வோம். பின்னே எக்கச்சக்கம் காசு குடுத்து வாங்கியதாச்சே.
நல்லா தெரிஞ்சவங்க கிட்டே கேட்கிறதுக்கும் பயம். இது ஒரு வேளை ரொம்ப மட்டமான கேள்வியோ. கேட்டா நம்மள முட்டாப்பய இது கூட தெரியலன்னு சிரிப்பானோ? சந்தேகம் வரும். வேற யாரோ சிடி டிரைவ் காபி ஸ்டேண்டா உபயோகிச்சாங்கன்னு சொல்லி நாமளும் கூட சேந்து சிரிச்சோமே. அது மாதிரி ஆயிடக்கூடாது. இதுக்குன்னு ட்ரைனிங் போறதுக்கும் நிறைய காசு கேக்கிறாங்க.
அப்புறம் கொஞ்சமா தடவி தடவி ஒரு கஷ்டமும் இல்லாம அதி முக்கிய சமாச்சாரங்களான ஈமெயில், இன்டெர்னெட், சாட் இதெல்லாம் உபயோகிக்க தெரியவரும். நன்றாக வலையில மேய்ந்து கொண்டிருக்கும் போது தான் குண்டு விழும். யோரோ பொண்ணு ஐ லவ் யூ னு ஈமெயில் அனுப்பியிருக்கா. ஆசையா கூட வந்த ப்ரொகிராமா திறந்து பார்த்த பிறகு கம்ப்யூட்டர் சரியா வேலை செய்யலை. அப்புறம் தெரிந்தவன் யாராவது வந்து நீயெல்லாம் கம்ப்யூட்டர் யூஸ் பண்ண வந்துட்டன்ற மாதிரி ஒரு லுக் விட்டு, தனக்கு தெரிந்த/தெரியாத கம்ப்யூட்டர் சங்கதிகளையெல்லாம் சொல்லி பயமுறுத்தி விட்டு சரி செய்து விட்டுப் போவான்.
திரும்பவும் அ னா, ஆ வன்னா ஆரம்பிச்சு ஈமெயில் தொறக்கவே கொஞ்ச நாளைக்கு கை நடுங்கும். கொஞ்சம் தேறி வலைக்குழுக்கள் எல்லாம் கண்டு பிடித்து ஒண்ணு விடாம எல்லாத்திலயும் சேர்ந்து, எல்லாத்திலயும் இருக்கும் காச், மூச்னு கத்தும் ஈமெயில்களை ஒண்ணு விடாம படித்து எப்பா இவ்ளோ விசயம் நமக்கு தெரியாமலயே இருக்கானு நித்தம் சோகமா லேட்டாக படுக்கப் போவோம்.
இதை எதுக்கு தேவையில்லாம இவ்வளவு நீளமா இழுத்துட்டுப் போறன்னு யாரும் கேக்க முன்னாடி எதுக்கு இத எழுத ஆரம்பிச்சேன்னு சொல்லிடறேன். கம்ப்யூட்டர் பற்றி அதிகம் தெரியாதவங்க, உபயோகிக்க ஆரம்பிச்ச பிறகு அதில என்னவெல்லாம் செய்யலாம், கிடைக்கும் இலட்சம் இலவச மென்பொருள்கள், அந்த தொழில் நுட்பம் பற்றி வரும் கட்டுரைகள் இதெல்லாம் பார்க்கும் போது பெரிய மலைப்பும் கூடவே நமக்கு அதெல்லாம் தெரியலையே னு ஒரு தாழ்வு மனப்பான்மையும் வரும். அவங்களுக்கெல்லாம் ஒரு சின்ன வழிகாட்டல் மாதிரி என்ன முக்கியமா தெரிய வேணும், எதைப் பற்றி கவலைப்பட வேண்டாம், எங்கு உதவி கிடைக்கும் இதெல்லாம் எழுதலாம்னு பாக்கிறேன்.
கம்ப்யூட்டர் துறையிலேயே இருக்கிறவங்களுக்கு கூட இது மாதிரி பிரச்சினைகள் உண்டு. அவர்களுக்கும் வைரஸ் வந்து மாட்டும். அவர்கள் அறியாமல் அவர்கள் கம்ப்யூட்டரில் வேறு யாராவது வந்து மேய்ந்து விட்டுப் போகக் கூடும். அப்புறம் படிக்கிறவர்களுக்கு முக்கிய பிரச்சினை, எனக்கு ஜாவா, சி, சி++, இது மாதிரி 5-6 மொழி தெரியும் என்று பெண்களிடம் பீலாவோ, பந்தாவோ விட்டுக் கொண்டிருக்கும் சக மாணவர்களைப் பார்த்து பயம் வரும். அப்படி எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாக இருக்க வேண்டுமாங்கிற கேள்விக்கு பதில் எழுத முயற்சி செய்யறேன்.
காசி மாதிரி ஆட்கள் எழுத்துரு மேட்டர் மாதிரி இணையத்தில நல்ல கத்துக்க வேண்டிய விசயங்களை எழுதறாங்க. நான் குறிப்பா எந்த தொழில் நுட்பத்தையும் பற்றி எழுதப் போறதில்லை. என்ன முக்கியமா தெரிஞ்சிக்கணும் அதை எங்க தெரிஞ்சிக்கிடலாம். அது மட்டும் எழுதறேன்.
தொடரும்.
இது நெசமாவே நாளைக்கு தான் தொடரும்.
மொட்டெல்லாம் பூவாகி காயாகி போன வாட்டி என்ன படிச்சோம்னு
ஞாபகத்தில இல்ல.
முற்றும்
எனக்கு இல்லைப்பா. ஒருவாட்டி எல்லா வலைமொட்டையும் படிச்சுட்டு கொஞ்ச நாள் கழிச்சி திரும்பி வந்தா
தொடரும்
விட்டு எழுதினா படிக்க பொறுமை இருக்கா உங்களுக்கு, ஆனா
தொடரும்
எப்படி இருக்குதுன்னு பார்த்தேன். இந்த மாதிரி விட்டு
தொடரும்
எல்லாரும் தொடரும் போட்டு தொடர் கதை எல்லாம் எழுதறாங்க. நானும் அப்படி எழுதினா
தொடரும்