கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று நிறைய விவாதங்கள். நம்புகிறவர்களும் அவரைப் பார்த்ததில்லை. கடவுள் நாம் இல்லாத நேரத்தில் வந்து விட்டு போனால் எப்படி கண்டு பிடிப்பது? இந்த வலைக்குறிப்பை படியுங்கள். கட்டாயம் அங்கு சுட்டப்பட்டிருக்கும் பக்கத்திற்குப் போய் மக்கள் எழுதியவற்றைப் படித்துப் பாருங்கள்.
அடுத்த இரண்டு குறிப்புகளில் இந்த வலைப் பதிவாளர் தமிழைப் பற்றியும் என்னுடைய பதிவைப் பற்றியும் எழுதியிருக்கிறார்.
அமெரிக்காவில் வந்த புதிதில் நண்பன் ஒருவன் ரொட்டி, ஜாம், சில மைக்ரோவேவில் வைத்து சாப்பிடும் சமாச்சாரங்கள் வாங்கி கொடுத்தான். ஓட்டலில் தங்கியிருந்த சில நாட்களில் சாப்பாட்டிற்கு அதை வைத்து ஒப்பேத்தியாயிற்று. அப்புறம் வீடு மாறி கார் வாங்கி நானாக வேலைக்குப் போக ஆரம்பித்தவுடன் நானே இரை தேட வேண்டிய நிலைமை. அரிசிச் சாப்பாடு கண்ணுக்கெட்டிய தூரம் வரை தட்டுப்படவேயில்லை. ஆபீஸில் மதிய உணவிற்கு கேண்டீன் பக்கம் எட்டிப் பார்த்தேன். மெயின் அயிட்டங்களில் எது நடமாடும் அயிட்டங்கள் இல்லாதது என்று தெரியவில்லை. வெஜ்ஜீ பர்கர் என்று எழுதியிருந்தது ஒரு தட்டுக்கு மேல். அதை மட்டும் ஒன்று எடுத்துக் கொண்டு சாப்பிடும் இடத்துக்கு வந்தேன். டீக்கடை பன் மாதிரி தான் இருந்தது. ஒரு வாய் கடித்தால் கொஞ்சம் இலை தளைகள் தட்டுப்பட்டது. இரண்டாவது வாய் கடித்தால் எதோ ரப்பர் மாதிரி இருந்தது. என்னது வெஜ்ஜீ என்று போட்டிருந்தானே என்று பன்னை பிரித்து உள்ளே பார்த்தேன். வட்டமாக வடை சைசில் எதோ ஒன்று. மாமிசம் மாதிரி தெரியவில்லை. தைரியமாக இன்னொரு வாய். புண்ணாக்கு ஞாபகத்திற்கு வந்தது.
எள்ளுப் புண்ணாக்கு சாப்பிட்டுருக்கிறேன். செக்கில் போட்டு எண்ணை எடுத்த பிறகு மீதி இருப்பது தான் புண்ணாக்கு. அப்படியே சாப்பிட்டால் கசக்கும். அதனுடம் வெல்லம் சேர்த்து சாப்பிட வேண்டும். ஆனால் மாட்டுக்கு வேறு சில புண்ணாக்கு வகையறாக்களை வைப்பார்கள். அது போலத்தான் இருந்தது பார்ப்பதற்கு. இதை எப்படி திங்கிறார்கள். நைசாக நடுவில் இருந்ததை எடுத்து விட்டு மீதி இருந்த பன்னை மட்டும் சாப்பிட்டதும் மேலும் பசித்தது. இதை மட்டும் சாப்பிட்டு எப்படி உயிர் வாழ்கிறார்களோ. இதில் எப்படி எடையைப் பற்றி வேறு கவலை வருகிறதோ? பக்கத்தில் இருந்த வெண்டிங் மெசினுக்குப் போய் இரண்டு சாக்லேட் பார்கள் வாங்கிக் கொண்டு திரும்பினேன், வீட்டிற்கு போகும் போது மறக்காமல் டிபன் பாக்ஸ் வாங்கிக் கொண்டேன். எதோ சமைத்து எடுத்துட்டு வர்ர மாதிரி கனவெல்லாம் கிடையாது. இன்னும் சுடு தண்ணீர் எக்ஸ்பெர்ட் தான். வீட்டிருந்து நாலு சிலைஸ் பிரட் அந்த புண்ணாக்கு பர்கரை விட எவ்வளவோ தேவலை.
அப்புறம் பிட்ஸா. இது இந்தியாவிலேயே கொஞ்சம் சுவைத்திருந்தேன். ஆனால் நிறைய பேருக்கு அது தான் தினசரி உணவு இங்கே. கீழே பிரட், நிறைய சீஸ். அதன் மேல் கண்ட கருமாந்தரங்களையும் தூவினால் பிட்ஸா ரெடி. இதெல்லாம் தாங்க முடியாமல் பக்கத்திலிருந்த இந்திய உணவகத்திற்கு சென்றால் அங்கு சாம்பார் எதை வைத்து செய்கிறார்கள் தெரியவில்லை. அது மாதிரி சாம்பாரை இது வரை சுவைத்ததில்லை. சட்னி ஐந்தாட்டு திட்டம் மாதிரி தொலைநோக்கோடு செய்து வைத்து விடுவார்கள் போல.
வீட்டில் ரூம் மேட் தயவில் எப்போதாவது சமையல் நடக்கும். அவனுடைய முறையில் யார் வேண்டுமானாலும் சீக்கிரம் சமையல் கற்றுக் கொள்ளலாம். எந்த வகை சமையல் பொருட்கள் இருந்தாலும் சமையல் செய்வது எளிது. எல்லாவற்றிருக்கும் ஒரே அல்காரிதம்(செய்முறை) தான். காய்கறி எல்லாம் வெட்டி முடித்தவுடன் சட்டியில் கொஞ்சம் எண்ணை ஊற்றி சீரகம் கடுகு இவையெல்லாம் போட வேண்டும். சட்டி சூடானவுடன் வெங்காயம் வதக்க வேண்டும். கொஞ்ச நேரம் கழித்து என்ன காய் வெட்டி வைத்திருக்கிறோமோ அதை போட்டு மேலும் வதக்க வேண்டும். நடு நடுவே கலர் கலராய் ஊரில் இருந்து கொண்டு வந்த பாட்டிலில் உள்ள பொடிகளில் ஒவ்வொன்றிலும் ஒரு ஸ்பூன். கூட அரிசி என்றால் நிறைய தண்ணீர் ஊற்ற வேண்டும். அவ்வப்போது கொஞ்சம் எடுத்து சாப்பிட்டுப் பார்த்துக் கொண்டு, எப்போது அடுத்தவர்களும் வாயில் வைக்கிறமாதிரி இருக்கிறதோ அப்போது ஸ்டவ்வை நிறுத்தி விடலாம்.
இப்படி செத்துப் போன நாக்கோடு இப்போது பர்கர் கிங், டாகோ பெல் பக்கம் போக அதிகமாக பயப்படுவதில்லை. டாகோபெல் நான் போனாலே மெக்ஸிகன் பிட்ஸா நோ கௌ என்று சொல்லாமலே ஆர்டர் செய்து விடுகிறார்கள். ஃபாஸ்ட் ஃபுட் என்பதற்கு வேக உணவு என்பதை விட வேகாத உணவு என்றால் தான் சரியாக இருக்கும்.
அமெரிக்க கால்பந்தாட்டம் இறுதி ஆட்டம் அடுத்த வாரம். கால்பந்தாட்டம் சரியான வார்த்தையா தெரியவில்லை. புட்பால் அப்படியே மொழி பெயர்த்தால் இது தான் வருகிறது. ஆனால் கால், கை, உடம்பு என்று எல்லாவற்றையும் வைத்து விளையாடுகிறார்கள். பேட்ரியாட்ஸ் எங்க ஊர் அணி. அவர்கள் ஆடிய கடைசி ஒரு சில ஆட்டங்களைப் பார்த்தேன். எங்கேயாவது கூட்டமாக பேசிக்கொண்டிருந்தால் இவர்கள் ஆட்டத்தைப் பற்றி தான் பேசுகிறார்கள். கூட்டத்தில் சும்மா ஆமாம் சாமி போடுவதற்கு ஆட்டத்தைப் பார்த்தால் ஏதாவது புரியவாவது செய்யும் என்று தான் பார்த்தேன். இதற்கு முன்னால் இந்த ஆட்டமே பைத்தியமாக இருந்த நண்பன் ஒருவன் நிறைய தடவை இதை விளக்குகிறேன் என்றான். மாடு மாதிரி முட்டிக்கொள்கிறார்கள், இதைப் போய் ஒரு ஆட்டம் என்று பார்ப்பதா என்றேன். என்னுடைய கெட்ட நேரமோ பேட்ரியாட்ஸின் நல்ல நேரமோ 2001ம் ஆண்டு அவர்கள் சூப்பர் பௌல் என்று சொல்லக்கூடிய இறுதி ஆட்டத்தில் வென்று விட்டனர். வேறு வழியில்லாமல் பார்த்த அந்த ஆட்டம் ஓரளவு புரிந்தது.
அப்பொழுது இந்த அணி அவ்வளவு பெயர் பெற்றிருக்கவில்லை. இவர்கள் வெல்வார்கள் என்று யாரும் நினைத்துக் கூட பார்க்கவில்லை. 2003ல் மறுபடியும் இறுதி ஆட்டத்திற்கு வந்திருக்கிறார்கள். ஆனால் இந்த முறை வலுவான அணி என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள். இந்த தடவை இவர்கள் ஆடிய இரண்டு மூன்று ஆட்டங்களைப் பார்த்து விட்டேன். வருகிற பிப்ரவரி ஒண்ணாம் தேதி சூப்பர் பௌல். எங்கும் அதைப் பற்றி தான் பேச்சு. இங்கு மிக அதிகமான மக்கள் பார்க்கக் கூடிய நிகழ்ச்சி. அந்த ஆட்டத்தின் போது விளம்பரம் செய்வதற்கான காசு எக்கச்சக்கம். நிறைய புதிய விளம்பரங்கள், பொருள்கள் அப்போது தான் அறிமுகம் செய்வார்கள்.
ஆனால் இன்னும் கிரிக்கெட்டில் யாராவது “பதானியை சேர்த்திருக்க வேண்டும்” என்றால் ஆமாம் பதானி நன்றாக ஆடுவார் என்று தான் தலையாட்டுகிறேன். பதானி பேட்ஸ்மேனா, பௌலரா என்று கூட தெரியாது. இந்திய அணியில் இப்போதைக்கு டெண்டுல்கர், கங்குலி, திராவிட் தவிர வேறு யார் பேரும் தெரியாது. ஆனால் டாம் பிராடி வாழ்க.
I have seen so many people ask questions in news groups about how to do so and so stuff. In good old days the questions are generally challenging and the poser would have tried everything on his behalf before posting the question to the public experts. In recent years the questions generally are coming with a tone assuming there are people out there who have nothing to do except to help them. Read the thread with this topic in comp.soft-sys.matlab. The posts are like “Help me immediately”, “I need to submit this tomorrow”, “Send me source code for such and such”. All these people must be either totally new to using computers are must have assumed that there are fools out there on the other side of their computer. Many of them who ask for help are not even polite. They are mostly like demands. Before posting to a public newsgroup everybody should be forced to read How to ask questions the smart way.
I do not have real media player in my machine. I used to have one long long ago. But after they made the player bloated with all the spywares and adwares I stopped using it and uninstalled them. I run away from any website carrying only real media files. If it is unavoidable I will install it just for that session and immediately uninstall it. I read in a blog entry that there is a free Real alternative which can play all of real media files without any of those annoying extra fittings. I need to try them. And all those who are still using real player try looking at your task manager or see what kind of information the player is sending its home using a firewall. They had the remarkable technology with scalable coding which plays streams nicely even in a dial-up connection. The ridiculous player masks all those.
Another thing which has recently gone from my machine is Flash. It is not coming back unless they give easy enable/disable, start/stop control. If you have not set your privacy settings properly some sites can take pictures through your webcam using flash and send it home.
We learned in school that the North magnetic pole is located on top of the Earth and South pole is exactly opposite at the bottom center. Though top and bottom on Earth is relative let us assume top corresponds to North pole and South corresponds to the bottom. Atleast that is the way all the table top globes are. But that does not seem to be true. North pole is not exactly at the top. Even worse it does not stay put at one place. Currently it is spotted at North of Canada. It moves at about 40 km per year. So a true North pole is different from a magnetic North pole. It is also expected to reverse the polarity arbitrary times. Though it is not very frequent a reversal may be due now. That is North pole will become South pole and viceversa. Already at some places the compasses do not point to the same direction it was pointing ten years ago. Read the very interesting article at NASA. If you have questions on what will be the effect of polarity reversal or other questions on magnetism read this FAQ.
I saw this joke in some magazine when the pathfinder reached Mars. I could not find that cartoon now. So I tried reproducing it.

உலகில் 98% அரிசி ஆசியாவில் தான் உற்பத்தியாகிறது.
சைனா, இந்தியா மற்றும் இந்தோனேசியாவில் முக்கிய உணவு அரிசி.
ஆனால் அமெரிக்கா தான் அரிசி ஏற்றுமதியில் முன்னணியில் இருக்கிறது.
இப்படி ஆரம்பிக்கிறது கோபார் டைம்ஸில் இந்த கட்டுரை. கொஞ்சம் நம்ப முடியவில்லை தான்.
சில நம்பக்கூடிய கவலை தரக்கூடிய செய்திகள்.
பாஸ்மதி அரிசி வகையின் காப்புரிமை RiceTec என்னும் அமெரிக்க நிறுவனத்திடம் இருக்கிறது. காப்புரிமை எண் 5,663,484.
Percy Schmeiser என்னும் கனடிய நாட்டு விவசாயின் மீது Monsanto நிறுவனம் தன்னுடைய காப்புரிமை பெறப்பட்ட அரிசி வகையை திருடி பயிர் செய்ததாக வழக்கு தொடர்ந்தது. Percy Schmeiser பக்கத்திலுள்ள மற்ற நிலத்திலிருந்து மகரந்தங்கள் தன்னுடைய பயிருக்கு காற்றில் வந்திருக்கலாம் என்கிறார்.
மேலும் படிக்க கோபார் டைம்ஸ் பக்கத்திற்கு செல்லவும். கோபார் டைம்ஸ் கட்டுரைகள் நன்கு ஆராய்ச்சி செய்து எழுதப்பட்டிருக்கின்றன.
பொங்கலும் அதுவுமா இது மாதிரியா எழுதறதுன்னு யாரும் திட்டாதீங்க.
பீகிள் தான் செவ்வாயிலிருந்து தகவல் அனுப்ப முடியவில்லை. ஆனால் அடுத்து சென்ற நாசாவின் ஸ்பிரிட் ரோவர் செவ்வாயில் பத்திரமாக இறங்கியவுடன் படங்களை அனுப்பத்தொடங்கிவிட்டது. இதே போல ஆப்பர்ச்சுனிட்டி என்னும் கலத்தையும் செவ்வாயில் ஜனவரி 24ல் இறங்குமாறு நாசா அனுப்பியுள்ளது. இவை இரண்டும் ஒரே மாதிரி வடிவமைக்கப்பட்டவை. செவ்வாயில் இரண்டு வெவ்வேறு இடங்களில் இறங்கி ஆராய்ச்சி செய்வதற்காக அனுப்பப்பட்டவை. இந்த இரண்டு இடங்களும் இதற்கு முன்னால் பாத் பைன்டர் அனுப்பப்பட்ட போது கிடைத்த தகவல்களை வைத்து தேர்வு செய்யப்பட்டது. இவ்விடங்களில் முற்காலத்தில் தண்ணீர் இருந்திருக்கலாம் என்றொரு ஊகம். நாசாவின் மார்ஸ் ரோவர் பக்கங்களில் செவ்வாயில் எடுக்கப்பட்ட படங்களைப் பார்க்கலாம்.