30
Dec
'03

ஊருக்கு ஒரு நாள் போன் பண்ணுவதற்கு தள்ளிப் போய் விட்டால் வேலை அதிகமோ என்று பெற்றோர் கவலைப்படுவர். இரண்டு நாள் தள்ளிப் போனால் உடம்பு ஏதேனும் சரியில்லையோ என்று பயப்பட ஆரம்பித்து விடுவர். இன்னோரு நாள் அதிகம் ஆனால் அங்கிருந்தே போன் பண்ண கை துடிக்கும். நான்காவது நாள் ஊரிலிருந்து போன் வந்து விடும். இப்படித்தான் ஆகி விட்டது பீகிளின் நிலைமை. போய் செவ்வாயில் இறங்கியது தான். பேச்சு மூச்சே காணோம். இன்னும் அதனிடம் இருந்து தகவலை எதிர்பார்த்து அதை அனுப்பியவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். போன இடத்தில் என்ன கஷ்டமோ யார் கண்டது. தேவையில்லாமல் என்ன பிரச்சினையிலோ எந்த குழியிலோ மாட்டிக்கொண்டு முழிக்கிறது தெரியவில்லை. இங்கிருந்தும் நிறைய தடவை கூப்பிட்டுப் பார்த்தாயிற்று. பதிலே காணோம். ஏதோ மங்கலா கூப்பிடற மாதிரி சொல்லி அனுப்பியிருக்காங்க. வேற நல்ல பேர் கிடைக்கலியா. இதோ இருக்குது பாரு நாம அனுப்பின பீகிள்னு பக்கத்தில போய் பாக்கிற நாள் தூரத்தில் இல்லை.
Beagle 2
All Rights Reserved Beagle 2.





பாலா தூங்கிக்கொண்டிருந்த ஒருவரை இறந்து விட்டார் என்று எடுத்துச்செல்ல முயன்றதைப் பற்றி எழுதியிருக்கிறார். இதை படித்ததும் இறந்தவர்கள் சங்கம் பற்றி ஒரு செய்தியில் படித்தது ஞாபகம் வந்தது. உத்திர பிரதேசத்தில் இந்த சங்கம் இருக்கிறது. இவர்கள் அரசாங்க பதிவுகளின்படி இறந்து விட்டவர்கள். பின் எப்படி உயிருடன் இருக்கிறார்கள்?

இவர்கள் வைத்திருக்கும் நிலத்திற்கு ஆசைப்பட்டு இவர்களுடைய உறவினர் யாராவது பிறப்பு/இறப்பு பதிவு செய்யும் அலுவலகத்தில் கையூட்டு கொடுத்து இவரை இறந்தவர்கள் பட்டியலில் சேர்த்து விடுவார். பின் இவருடைய நிலம் சட்டப்படி(?) தனக்குச் சேரும் என்று அதையும் கையூட்டு கொடுத்து தன்னுடைய பெயருக்கு மாற்றிக் கொள்வார். இப்படி ஒருவர் இருவர் அல்ல ஆயிரக்கணக்கான பேர் ஏமாற்றப்பட்டார்கள்.

லால் பிஹாரி என்பவர் தான் இறந்தவர் சங்கத்தை ஆரம்பித்தவர். இவர் முதலில் இப்படி ஏமாற்றப்பட்டதும் அரசு அலுவலகங்கள், நீதிமன்றம் என்று அலைந்திருக்கிறார். ஒருவரும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. பதினெட்டு வருடங்கள் போராட்டத்திற்குப் பிறகு இவரை மீண்டும் வாழ்கிறவர்கள் பட்டியலில் சேர்த்துக் கொண்டார்கள். பாதிக்கப்பட்டவர்கள் இவரைப்பற்றிக் கேள்விப்பட்டு நிறைய இவரைத் தேடி வந்ததால் இறந்தவர்கள் சங்கம் அமைத்து அவர்களுக்கு மீண்டும் உயிர் கொடுக்க உதவி செய்கிறார்.

லால் பிஹாரி இறந்திருந்த போது உயிர் பிழைக்க பல வித்தியாசமான போராட்டங்களைச் செய்திருக்கிறார். கைதாகி விட்டு நீதிபதி முன்னால் நான் உயிருடன் இல்லை என்று சொல்லியிருக்கிறார். தன் மனைவிக்கு தன்னுடைய ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று வாதாடியிருக்கிறார். இறுதியில் தன்னுடைய நிலம் திரும்பக் கிடைத்த பொழுது அதைத் திருடிய தன்னுடைய உறவினரே வெட்கும் படியாக அவருக்கே திருப்பிக் கொடுத்து விட்டார்.

இதைப் பற்றி வந்த செய்திக்கட்டுரைகள்:
டெலிகிராப்
டைம் ஆசியா

இந்த பைனான்சியல் எக்ஸ்பிரஸ் கட்டுரை அரசாங்கத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விவரிக்கிறது.





Universe in a nutshell புத்தகத்திலிருந்து சில வரிகள்.

“அணுகுண்டு அழிவிற்கு ஐன்ஸ்டீனை காரணம் சொல்வது விமான விபத்திற்கு நியூட்டனைக் குறை சொல்வது போல!”

“புத்திசாலித்தனத்திற்கும் ஒரு இனம் எவ்வளவு காலம் வாழும் என்பதற்கும் சம்பந்தமில்லை. ஒரு செல் மட்டும் கொண்ட பாக்டீரியா இனம் இன்னும் இருக்கிறது. அறிவு படைத்த மனிதன் அணு ஆயுதத்தால் சண்டை போட்டு தன்னையே சீக்கிரம் அழித்துக்கொள்ளப் பார்க்கிறான்.”





24
Dec
'03

இன்று கிளப்பில் செஸ் விளையாட்டில் வித்தியாசமான அனுபவம். ஜான் கர்டோ என்னும் பிடே மாஸ்டர் எங்கள் கிளப்பில் ஆடுவார். 1948ல் ஆரம்பித்து பதினேழு முறை மாசாச்சுசெட்ஸ் மாநிலத்தின் சாம்பியன் ஆனவர். அந்த வயதிலும் தவறாமல் ஒவ்வொரு வாரமும் விளையாட வருவார். இன்னும் வலுவாக செஸ் விளையாடுபவர். காய்களை நகர்த்தும் பொழுது வயதினால் அவருடைய கைகள் நடுங்கும். ஆனால் ஒவ்வொரு காய் நகர்த்தலும் எதிரியை வலுவிழக்கச்செய்யும். அவர் இன்று ஆடுவதற்கு முன்னால் என்னிடம் வந்து ஒரு இந்திய இரண்டு ரூபாய் நாணயத்தைக் கொடுத்து விளையாட்டாக இது அதிர்ஷ்ட நாணயம். வைத்துக் கொள். இன்றைக்கு ஆட்டத்தில் ஜெயிக்க வேண்டும் என்றார். நானும் சிரித்துக் கொண்டே வாங்கி வைத்துக் கொண்டேன். அவரிடம் இந்தியா சென்றீர்களா என்று கேட்டேன். அவர் இல்லை எங்கோ கிடைத்தது. இதே போல மெக்சிகோ நாணயமும் கிடைத்தது. அது நன்றாக இருந்ததால் அதை நான் வைத்துக் கொண்டேன் என்றார். மேலும் அங்குள்ள நாணய மாற்றிகள் இந்த நாணயங்களை வாங்க மறுக்கின்றன என்றார்.

அப்புறம் நான் என்னுடைய ஆட்டத்தையும் அவர் அவருடையதையும் ஆடப் போய் விட்டோம். என்னுடன் விளையாடியவர் நான் அதிகமாக பார்த்திராத துவக்க ஆட்டத்தை ஆடினார். ஆரம்பத்தில் இருந்தே அவ்வளவு சரியான நிலையில் இல்லை என்னுடைய அமைப்பு. விரைவில் இரண்டு சிப்பாய்களை இழந்து விட்டேன். என்னுடைய ஒரே நம்பிக்கை அவருடைய ராஜா அவ்வளவு பாதுகாப்பான நிலையில் இல்லை. எனக்கு அவரை விட நேரம் குறைவாகவாக இருந்தது. இந்த நிலையில் அவர் ஒரே மாதிரி நகர்த்தலை இரண்டு தடவை ஆடினார். மூன்றாவது தடவை செய்திருந்தால் டிரா ஆகியிருக்கும். அதற்கு முன்னால் இரண்டு பேருக்கும் ஐந்து நிமிடத்திற்கும் குறைவான அளவு நேரம் இருக்கும் பொழுது நான் டிரா கேட்டேன். அவர் முடியாது என்று கூறி விட்டு மாற்றி ஆடினார்.

ஆனால் அவருடைய ராஜா பாதுகாப்பாக இல்லாததால் அந்த குறைவான நேரத்தில் சரியாக கணிக்க முடியாமல் தவறு செய்து விட்டார். அத்துடன் அவருடைய நேரமும் முடிந்து விட்டது. ஜான் கர்டோ சொன்ன மாதிரி உண்மையிலேயே அதிர்ஷ்டம் தான்.

கர்டோ 1998இல் ஒரே நேரத்தில் 31 பேருடன் எங்கள் கிளப்பில் விளையாடினார்.





16
Dec
'03

Have you watched American football on TV? If so have you ever wondered how they make that magical first-down yellow line appear on the ground. It appears only on TV and not on ground. The basic technique is called chroma keying. Chroma keying means replacing one color in the image or video with another color. In this case we have to replace a portion of the ground color which is usually green with yellow line. Sounds easy. But once you get the numbers into the computers it gets complicated. Here are the variables

  • The ground is not perfectly green. Depending on sunlight, shade, clouds, snow and dirt it may vary widely.
  • The line obviously is not supposed to go over players who may wear any color of dress.
  • The camera might be in different zoom levels.
  • The camera might be pointing in different angles and locations of the ground.
  • Camera lenses may have some effect on the video.
  • The technology has to work with all the cameras in the field.
  • Yard line moves.
  • Football field is not flat.
  • That sounds complicated enough. That is why sportvision the company who first created this technology got an Emmy for this. Sportvision calls their system 1st and Ten. IEEE November 2003 spectrum magazine had an article on this. Howstuffworks also has a good explanation on the frist-down line.

    The basic chroma keying technique also known as image compositing is explained in this iMovie tutorial. Chroma keying is widely used in TV and movies. When compositing is required they capture the scene with a bright blue screen in the background. Later in the post processing the blue is replaced by whatever needs to be present in the background.

    More about chroma keying another time.





    தூரத்தில வர்ரது யாரு? அது மாதிரி தான் இருக்கு. வழக்கம் போல போயிருவம். நம்மள பாக்கறா மாதிரியே இருக்கு. நாமளும் பாக்கவா வேணாமா? சரி அவன் பார்த்தா நாமளும் பார்ப்போம். பார்த்தா சிரிப்பானோ? எவன் சிரிப்பான். தலய நிமிந்து பார்த்தாலே பெரிய விசயம். பக்கத்தில வந்துட்டான். தலயக் குனிஞ்சிட்டு ஓரக் கண்ணால எந்தப் பக்கம் பாக்கிறானு பாப்போம். அவனும் பராக்கப் பாக்கிற மாதிரி நம்மளயே நோட்டம் விடுறானோ. நெருங்கி வந்துட்டான். இதென்ன நம்மளயே பாக்கிறான். ஒருவேள அந்த பிரமிட் ஸ்கீமை சேந்தவனா இருப்பானோ. சரி நாமளும் பாப்போம். சிரிக்கிறான். நாம பாக்க அசிங்கமா உடுத்தியிருக்கோமோ?

    ஹல்லோ ஹவ் ஆர் யூ? பைன் ஹவ் ஆர் யூ?
    வார்த்தைகள் அனிச்சையாய் வந்தன.

    போயிட்டான். அவ்வளவு தான். ஒருவேள இங்கயே பொறந்து வளந்தவனா இருப்பான்.

    இன்னொரு இந்தியரை தெருவில் பார்க்கும் போது





    எங்கள் ஊரில் பள்ளியில் படிக்கும் பொழுது பொது நூலகத்தில் நான் உறுப்பினர் ஆனது பத்தாம் வகுப்பு கோடை விடுமுறையில். உறுப்பினர் ஆவதற்கு ஏற்கனவே இருக்கும் ஒரு உறுப்பினரிடம் கையெழுத்து வாங்க வேண்டும். நண்பன் ஒருவனை ஆர்வப்படுத்தி இரண்டு பேருக்கும் சேர்த்து ஏற்கனவே உறுப்பினரான அவனுடைய மாமாவிடம் கையெழுத்து வாங்கி சேர்ந்தோம். நூலகத்தில் இருக்கும் வகை வகையான கதைப் புத்தகங்களைப் பார்த்ததும் சந்தோசம் கொள்ளவில்லை. தினமும் மூன்று புத்தகங்களுக்கு மேலே எடுக்கக் கூடாது என்றது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது. ஆனாலும் நாள் தவறாமல் மூன்று புத்தகங்களை எடுத்துக்கொண்டு போய் படித்து விட்டு அடுத்த நாள் சரியாக காலை பத்து மணிக்கு போய் அடுத்த மூன்று புத்தகங்களுக்கு நிற்பேன். நூலகர் கருப்பு வெள்ளைத் திரைப்படத்தில் காட்டப்படும் சோகமான ஆபீஸ் கிளார்க் போல இருப்பார். தினமும் “அதுக்குள்ள படிச்சு முடிச்சாச்சா?”, என்ற ஒரே கேள்வியைக் கேட்பார்.

    எத்தனை புத்தகங்கள் படித்தேன் என்ன படித்தேன் என்றெல்லாம் இப்பொழுது ஞாபகம் இல்லை. அப்போதெல்லாம் எழுத்தாளர் பெயரெல்லாம் அவ்வளவாகத் தெரியாது. அம்மா மட்டும் லட்சுமி நன்றாக எழுதுவார் என்று அடிக்கடி சொல்லக்கேட்டு அவருடைய ஒரு சில நாவல்களை எடுத்து படித்திருக்கிறேன். மற்றபடி ஒரு புத்தக அலமாரியின் முன் நின்று ஒவ்வொரு புத்தகமாக எடுத்து ஓரிரண்டு பக்கங்களைப் படித்துப் பார்ப்பேன். பிடித்திருந்தால் அன்றைக்கு அந்தப் புத்தகம் தேர்வு செய்யப்படும். வேறு யாரும் அங்கு வந்து அவ்வளவாக புத்தகம் எடுத்து நான் பார்க்கவில்லை. கூட உறுப்பினரான நண்பனும் ஒரு வாரத்திற்குப் பிறகு வேறு ஊரில் உறவினர் வீட்டுக்குச் சென்று விட்டான். அதனால் நான் எடுத்த புத்தகங்கள் அப்படியே அதே வரிசையில் இருக்கும். படித்தது படிக்காதது என்று பிரிக்க வசதி.

    திரைப்படங்கள் போலல்லாது பெரும்பாலான நாவல்கள் அன்றாட வாழ்க்கையை மையமாகக் கொண்டு வரும். அப்படிப்பட்ட நாவல்கள் கிணற்றுத் தவளை மாதிரி எங்கள் ஊர் தவிர யாரைப் பற்றியும் தெரியாமல் இருந்த எனக்கு ஒரளவு உலக அறிவைக் கொடுத்தது.

    அப்புறம் கல்லூரிக்குப் போன பிறகு அந்த நூலகத்திற்குப் பக்கத்தில் போகவில்லை. எல்லாரும் சொல்வது போல, “அடுத்த முறை போகும் பொழுது இது எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும்”.





    14
    Dec
    '03

    When you talk about some scientist whom you know only by name and his inventions, usually a vague picture of a weird introverted, unkempt, obsessed not so social person comes to mind. That is the picture the movies and stories have told us. Are scientists really like that? Well a question is asked. So there has to be a survey. The scientist magazine conducted the survey. The surprise result, the scientist species also seem to be normal and sociable human beings.





    12
    Dec
    '03

    BBC news mentions that Baramati in Maharashtra, India has got automated computerised milk collection centers. It is a boon to the 100,000 farmers living around that area. Previously they had to milk by hand, had to rush to market while the milk is fresh and they sell hardly 50%. Thanks to the private company Dynamix, now they have machines for milking and can sell right at their place. Ofcourse the company is not doing it without benefits. Dynamix is a large dairy product company. Its main products include cheese, butter, ghee, whey powder and baby foods. (whey is the watery part of milk when milk turns curd). According to Business Line article the company is able to procure only around 10% of their processing capacity. So it obviously makes sense to encourage and help the farmers to produce more. Just a win-win situation.





    11
    Dec
    '03

    Metrowest chess club is in Natick which is near Boston. It is about 10 minutes drive from my office. They organize a tournament every month and one round is played on every Tuesday. The club has a membership fee and entry fee for each tournament. Membership fee is $35 per year. Entry fee per tournement varies between $15 and $20. There are 3 or 4 categories one can compete in depending on the rating. The sections approximately fall under open, under 1800, under 1500, under 1200. The ratings are given by USCF (United States Chess Federation). So if you need to play in the club you have to be a USCF member which costs $49 per year. Prize money depends on the section and the entry fee ranging from $200 to $20.

    The organization and the game playing environment is pretty good. In the last month’s tournament for the first time a total of 100 players played. You get to meet lot of different people. 99% of the club members are males. I dont know why not many females play chess. The club website is well maintained with lots of pictures from the playing area. The website features all information about current, past and future events. There is library with a good collection of books and weekly free group lesson conducted by an expert.

    Next time more about my playing.





    « Previous Articles